“இது புதுசா இருக்கே”- ஸ்டம்புக்கு பின்னால் சென்று பவுண்டரி அடித்த இங்கிலாந்து வீராங்கனை

0
1760
Tamsin Beaumont

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்யத் தொடங்கியது தொடக்கத்திலிருந்தே இந்தியாவுக்கு விக்கெட் சரிவுகள் ஏற்பட தொடங்கியது .தொடக்க வீரரான மந்தனா கூட்டணி சேர்ந்தார் கேப்டன் ஹம்பீரித் கவுர். மந்தனா 70 ரன்களும் ஹம்பீரித் கவுர் 36 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் இந்திய அணி குவித்தது.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இங்கிலாந்து மகளிர் அணி 154 ரன்களை 18.2 ஓவர்களில் சேசிங் செய்து போட்டியை மட்டுமின்றி தொடரையும் வென்றது . இங்கிலாந்து மகளிர் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டேனி வியாட் 89 ரன்களும் நாட் ஸ்கைவர் 42 ரன்களும் குவித்து வெற்றிக்கு உதவினர் .

- Advertisement -
India Women

ஸ்டம்புக்கு பின்னால் சென்று பவுண்டரி

இப்போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீராங்கனை டம்மி பியூமண்ட் பிராட் ஹேடின் போல வித்தியாசமான ஷாட்டினை அடித்து a அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் . போட்டியின் மூன்றாவது ஓவரின் போது ஓவரின் கடைசி பந்தை ராதா யாதவ் ஆப் சைடில் வீசினார் அதை அடிக்க பேக்புட் சென்ற டம்மி பியூமண்ட் திடீரென ஸ்டம்பிற்க்கு பின்புறம் சென்று அந்த பந்தை பவுண்டரிக்கு அடித்தார். 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்க்கொண்டது போது அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் இது போன்று ஒரு ஷாட்டை அடித்து பந்துவீச்சாளரை கிறங்கடித்தார் பிராட் ஹேடின் .

ஆஸ்திரேலிய A மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த போட்டியில் அணிக்காக விளையாடிய பிராட் ஹேடின் சோயிப் அக்தர் பந்தினை எதிர்கொண்டார். அக்தர் பந்து வீசும்பொழுது ஆவர் ஸ்டம்பிற்க்கு பின்புறம் சென்று பந்தை லெக் சைட் திசையில் அடித்தார் . டம்மி பியுமண்டின் இந்த ஷாட் பிராட் ஹேடின் போல் உள்ளது என்று ரசிகர்கள் இருவரையும் ஒப்பிட்டு வருகிறார்கள். மேலும் ஒரு சிலர் அவருடை அந்த ஷாட்டின் யுக்தி மிகவும் தவறு என ஸ்டம்பிற்க்கு பின்புறம் சென்று அடித்த ஷாட்டை குறித்து சர்ச்சைகளான கருத்துக்களை கிளப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது