“திரும்ப லண்டன் போய் சேர முடியாது” – கேள்வி கேட்ட பீட்டர்சனை செமயாக கலாய்த்த தமிழ்நாடு வெதர்மேன்!

0
1504

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியை முன்னிட்டு இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுக்கும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கும் ட்விட்டரில் நடந்த விவாதம் ரசிகர்களை சிரிப்பலையைஏற்படுத்தியது.சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? தமிழ்நாட்டில் எங்கு எங்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது?

சென்னையில் எத்தனை மணிக்கு மழை தொடங்கி எத்தனை மணிக்கு மழை முடியும் என்பதை அப்படியே கணித்து சொல்வதில் வல்லவர்தான் பிரதீப் ஜான். இவர் தமிழ்நாடு வெதர்மேன் என்ற சமூக வலைத்தள பக்கத்தில் இயங்கி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று இறுதிப்போட்டியில் குஜராத்தை எதிர்கொள்வதால் ரசிகர்கள் பலரும் அகமதாபாத்தில் மழை பெய்யுமா பெய்யாதா என்று தமிழ்நாடு வெதர்மேன் கேட்கத் தொடங்கினர். இதனை அடுத்து பிரதீப் ஜானும் அகமதாபாத்தில் நிலவும் வானிலை மாற்றம் குறித்து தொடர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வந்தார்.

பெயரில் தமிழ்நாடு என்று இருப்பதால் அகமதாபாத்தில் இருக்கும் மழையை இவர் எப்படி கணிக்கிறார் என்று இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து சமூக வலைத்தளத்தில் பிரதீப் ஜானிடம் உங்களால் அகமதாபாத்தில் இருக்கும் வானிலை நிபுணர் போல் சரியாக கணிக்க முடியுமா?

நீங்கள் அனைவரும் ஒரே ரேடார் தான் பயன்படுத்துவீர்களா இல்லை வெவ்வேறு ரேடாரை பயன்படுத்துவீர்களா? அப்படி என்றால் அடுத்த மழை எப்போது வரும் என்பது குறித்து சொல்ல முடியுமா என பீட்டர்சன் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பிரதீப் ஜான் கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

தங்கிலீஷில் இதற்கு முதலில் பதில் அளித்த பிரதீப் ஜான் இதை மட்டும் சென்னையில் நீங்கள் கேட்டுப் பாருங்கள். உங்களால் லண்டன் திரும்ப முடியாது என்று கூறிவிட்டு அதற்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதாக கூறி இல்லை மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஏற்கனவே மழை பெய்ய ஏற்படக்கூடிய காரணிகளை இரண்டு மலைமேகங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டது.

இதனால் மூன்றாவது மழை மேகங்கள் உருவாக வாய்ப்பு கிடையாது என்று பதிலளித்துள்ளார். தங்கிலீஷில் பீட்டர்சனை கலாய்க்கும் விதமாக பதில் கூறிவிட்டு பிரதீப் ஜான் கலாய்த்துள்ளார். எனினும் ரசிகர்கள் சிலர் பீட்டர்சன் கண்ணியமான முறையில் கேள்வி கேட்டிருப்பதாகவும், ஆனால் பிரதீப் ஜான் தேவை இல்லாமல் கலாய்த்து பதில் கொடுத்து இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சிலர் பிரதீப் ஜானின் நகைச்சுவை திறன் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.  பிரதீப் ஜான் இரவு 10 மணிக்கு மேல் போட்டி நடக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் நேற்று ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் இதனை மேற்கோள் காட்டி பிரதீப் ஜானிடம் உங்களுடைய கணிப்பு தவறாகி விட்டது என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.