ஐபிஎல் 2021

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம்பிடித்திருக்கும் தமிழ் வீரர்கள் ஒரு அலசல்

தற்போதைய கிரிக்கெட் உலகில் தலைசிறந்த அணி என்றால் சட்டென்று கூறிவிடுவார்கள் இந்தியா என்று. ஆம், போட்டிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் இருந்தாலும் ஆதிக்கம் செலுத்துவதில் இந்தியாவிற்கு நிகர் இல்லை. இந்த பெருமைக்கும், வளர்ச்சிக்கும் அச்சாரமாக இருந்தது 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் தான் காரணம். ரஞ்சி தொடர் மூலம் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்தியா அணிக்காக தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்படி தேர்வாகும் வீரர்களின் திறமையை பற்றி மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த ஐபிஎல் தொடர் இந்திய அணியின் தேர்விலேயே மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிட்டியது. இவர்களின் ஒவ்வொரு ஆட்ட நுணுக்கத்தையும் ரசிகர்களால் நேரடியாக பார்க்க முடிந்தது. இதனை அடுத்து சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி, எந்த ஒரு தவறான வீரர்களின் தேர்ச்சியை பற்றி கேள்வி எழுப்ப அடித்தளமாக அமைந்தது. ஆக, இப்படியாக இந்திய அணியின் வளர்ச்சியானது அபரிமிதமானது.

- Advertisement -

அதாவது, பறந்து விரிந்த இந்திய துணைக்கண்டத்தில் குறிப்பிடும் வகையில் சில மாநிலங்களில் இருந்தே வீரர்கள் தேர்வாகி இருந்தனர். இதனை மாற்றி அமைத்ததும் ஐபிஎல் தொடர் தான். அப்படி பார்க்கையில் சென்னையை அடிப்படையாக கொண்டே இடம்பெற்று வந்தனர். சமீபத்தில் தான் மாறுதலாக சேலத்திலிருந்து நடராஜன் தேர்வானார். இவரின் வளர்ச்சியும் மக்கள் போற்றும் வகையில் அசத்தலாக அமைந்தது.

மேலே குறிப்பிட்டது போல இந்தியாவிற்கு வீரர்களை உருவாக்கி தருவதில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்குண்டு. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூர் போன்று பெருநகரங்களுக்கு இணையாக சென்னை இருந்து வந்தது. அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்று வீரர்கள் உருவாக எதுவாக சென்னை இருந்ததும் ஒரு முக்கிய காரணம். சரி, இப்படியாக தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் எதனை தமிழக வீரர்கள் இருகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?… சரி வாருங்கள் யார் யார் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.

தமிழ்நாடு வீரர்கள் சமீப காலங்களில் தங்கள் நாட்டிற்காகவும் தங்கள் மாநிலத்திற்க்காகவும் சிறப்பாக விளையாடுகின்றனர். குறிப்பாக அஸ்வின்,சுந்தர் மற்றும் நடராஜன் போன்றவர்கள் சமீபகாலகமாக அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை தவிர்த்து மற்ற தமிழ்நாடு வீரர்களும் தனது மாநில அணிக்காக பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் முதலாவதாக.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சாய் கிஷோர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவான காலத்தில் எங்கு பார்த்தாலும் தமிழக வீரர்களாக தென்பட்டனர். முரளி விஜய், அஸ்வின், பத்ரிநாத் என குறிப்பிடும் வீரர்கள் இருந்தனர். மேலும் விளையாடும் XIம் வாய்ப்பு கிடைத்ததால் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பையும் பெற்றனர். எல்லா ஐபிஎல் தொடரிலும் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடுவார்கள். மேலும் 2011 மற்றும் 2012 ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதித்து காட்டியது. ஆனால், சமீபகாலமாக சென்னை அணி தந்து அடையாளத்தை இழந்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது அணியில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சாய் கிஷோர் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர். அனால் இவர்களுக்கும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.

டெல்லி கேபிட்டல்ஸ்: அஸ்வின் மற்றும் சித்தார்த்.

 இந்திய அணியின் சமீபகால சுழற்பந்து வீச்சாளர்களில் சிறந்து விளங்குபவர் அஸ்வின். எந்த அணியில் இடம்பெற்றாலும் இவரின் பங்களிப்பு அளப்பரியது. கடந்த ஆனது ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற இவரும் ஒரு காரணம். இவரை அடுத்து மற்றோரு வீரராக சித்தார்த் இருக்கின்றார். ஐவரும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி.

T20 வடிவிலான போட்டிகளில் சிறந்த பினிஷெர்களில் ஒருவராக விளங்குபவர் தினேஷ் கார்த்திக், இவர் கடந்த சில ஆண்டுகளாக KKR அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். மேலும் கீப்பிங்கிலும் அசத்தி வருகிறார், அதாவது ஐபிஎல் வரலாற்றில் அதிக நபர்களை ஆட்டமிழக்க செய்ததில் தோனியை காட்டிலும் முன்னணியில் இருக்கிறார். இவரை அடுத்து, வருண் சக்ரவர்த்தி தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் எதிரணியை துழைத்து வருகிறார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா அணிக்கு தேர்வாகும் வாய்ப்பும் கிட்டியது.

பஞ்சாப் கிங்ஸ்: முருகன் அஸ்வின், ஷாருக் கான்.

Photo: Shahrukh Khan/Instagram

முருகன் அஸ்வின் ஒரு சுழற்பந்து வீச்சாளர். இவர் கடந்த சில வருடங்களாக பஞ்சாப் அணிகாக தந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். மேலும் இந்த வருடமும் அதை தொடருவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால்  இந்த ஆண்டு அனைவரது பார்வையும் ஷாருக் கான் மேல் தான் உள்ளது. அதிரடி ஆட்டக்காரரான ஷாருக் இந்த ஆண்டு எப்படி ஜொலிப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத்: விஜய் ஷங்கர் மற்றும் நடராஜன்.

ஆல் ரவுண்டர் ஆன விஜய் ஷங்கர் தனது திறமையால் 2019 உலக கோப்பை அணியில் இடம்பெற்றார். ஆனால்  காயம் காரணமாக பத்தியில் வெளியேறிய இவர் சமீபகாலமாக தனது பார்மை இழந்து தவித்து வருகிறார். இந்த ஆண்டு இவருக்கு சிறப்பாக அமையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், நடராஜன் தந்து வெறித்தனமான ஆட்டத்தை தொடர்ந்து தர காத்திருக்கிறார். கடந்த ஆண்டு அதிக யார்க்கர் வீசியதில் (62) இவருக்கும் ரபடாவிற்கும் (38) நிறைய இடைவேளை இருந்தது. பும்ராவை  காட்டிலும் அதிக யார்க்கர்களை போட்டு புதிய “யார்க்கர்கிங்” ஆக உயர்ந்து வருகிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: வாஷிங்டன் சுந்தர்.

இந்த அணியில் இருக்கும் ஒரே தமிழ் சுந்தர் மட்டும் தான். இந்திய வீரராக உயர்ந்து தந்து பங்களிப்பை RCB அணிக்கும் சரியாக அளித்து வருகிறார். அஸ்வினுக்கு அடுத்து பவர்-பிளே ஓவர்களில் கட்டுக்கோப்பாக போடக்கூடிய திறமை இவருக்கு உண்டு. அதிகபட்சமாக 7க்கும் குறைவாக ரன்கள் வழங்கும் சராசரியை வைத்துள்ளார் சுந்தர். மேலும் இவர் ஒரு நல்ல பேட்ஸ்மானும் கூட.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை அணிகளில் ஒரு தமிழர்கள் கூட இடம்பெறவில்லை. ஆக மொத்தம் இந்த 13 தமிழக வீரர்களே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேல உயர நாமும் எதிர்நோக்கியிருப்போம்.

Published by
Tags: CSKMIRCB