தோனி ஃபார்முலாவ என்னோட கேப்டன்ஷிப்பில் பயன்படுத்திட்டு வரேன் – ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
5227

தோனி வழியை பின்பற்றி கேப்டன் பொறுப்பில் செயல்படப்போகிறேன் என ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிராக லக்னோ மைதானத்தில நடந்த டி20 போட்டியில் பலருக்கும் ஆச்சரியங்கள் காத்திருந்தது. ஏனெனில் இந்த மைதானத்தில் அதிக ஸ்கோர்களும் அடிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்த இரண்டாவது டி20 போட்டியில் 100 ரன்கள் எட்டுவதற்கே இரண்டு அணிகளும் மிகவும் போராடின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி எட்டு விக்கெடுகள் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

100 ரன்கள் என்ற குறைந்த இலக்கை சேஸ் செய்யும் இந்திய அணி விரைவாக இலக்கை கடந்து வெற்றியை ருசிக்கும் என்று எதிர்பார்த்தபோது, நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்து இறுதி வரை போராடினர்.

போட்டியின் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று, இந்திய அணி 19.5வது ஓவரில் 100 ரன்கள் இலக்கைக் கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.

- Advertisement -

விரைவாக இந்த ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்கலாம். எதற்காக போட்டியின் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று ஃபினிஷ் செய்தீர்கள்? என கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஹார்திக் பாண்டியா, “ஆம்.” என்று ஒப்புக்கொண்டதோடு, தோனியின் பாணியில் ஆட்டத்தை எடுத்துச் சென்றேன் என கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா பேசியதாவது: ஆம், போட்டியின் கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று வெற்றி பெற்றது எங்களின் யுக்தி. இது தோனியின் வழி. என்னவென்றால், சிக்கலாக இருக்கும் போட்டியை கடைசிவரை எடுத்துச் செல்லும்போது இறுதியில் நமக்கு சாதகமாக மாறலாம்.

மிடில் ஓவர்களில் ஆட்டத்தை விரைவாக முடிக்கலாம் என்கிற நோக்கில் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அதிரடியாக விளையாடும் பொழுது விக்கெட்டுகளை இழக்க நேரிடும். அதேநேரம் போட்டியின் கடைசி ஒவர் வரை எடுத்துச் செல்லும் பொழுது, பிட்ச் பழகிவிடும். பந்தின் மீது கூடுதல் கவனமும் இருக்கும். திட்டமிடிலும் கிடைக்கும். அதே போல் விக்கெட்டுகளும் கையில் இருக்கும். அப்பொழுது திட்டமிட்டு ரிஸ்க் எடுக்கலாம். இது தோனியின் பாணி. நான் இதை பயன்படுத்தினேன். மேலும் இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் தங்களது அணுகுமுறையை நன்றாக கவனிக்க முடியும். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சரி செய்து கொள்ளவும் இது போன்ற போட்டிகள் உதவும்.” என்று பேசினார்.