டி20 உலககோப்பை.. ஆப்கான் சீரிஸ்.. பிசிசிஐ கழட்டிவிட்ட இந்திய வீரர்கள்.. சிறப்பான சம்பவம்!

0
2633
ICT

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உள்நாட்டில் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி முதல் விளையாடுகிறது.

டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்த ஒரே ஒரு சர்வதேச டி20 தொடர் மட்டுமே இருப்பதால், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு வீரர்களை தேர்வு செய்வதற்கு மிகவும் முக்கியமான தொடராக எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பாக இந்திய தேர்வுக்குழு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியை அறிவித்தது.

கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் அதிரடியாக டி20 அணிக்கு திரும்பியிருக்கிறார். இவருடன் சேர்த்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய டி20 அணிக்கு திரும்பியிருக்கிறார்.

மேலும் இசான் கிஷானை நீக்கி சஞ்சு சாம்சனுக்கு இரண்டாவது விக்கெட் கீப்பராக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹர்திக் பாண்டியா இல்லாத காரணத்தினால் சிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயரை டி20 கிரிக்கெட் வடிவத்தில் இருந்து மீண்டும் நீக்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் சுழற் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாகல் அதிரடியாக விலக்கப்பட்டு இருக்கிறார்கள். அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் பும்ரா, சிராஜ், சமி மூவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ருத்ராஜ் உடன் சேர்ந்து சூர்யா குமார் யாதவும் காயத்தின் காரணமாக இடம்பெறவில்லை.

தற்பொழுது இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கில் மூவரும் இருக்கிறார்கள். எனவே ருத்ராஜ் இந்த முறை டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவது கடினம் என்று தெரிகிறது.

மேலும் சிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர்இருவரும் தற்காலிகமாகவே இருக்கிறார்கள். இவர்களது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் வந்துவிடுவார்கள். மூன்று துவக்க ஆட்டக்காரர்கள் இருப்பதால் இஷான் கிசானுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. எனவே சஞ்சு சாம்சன் இரண்டாவது விக்கெட் கீப்பராக தொடரலாம்.

அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜா பெரும்பாலும் சரியாக வரமாட்டார் என்று பலரும் கருதுகிறார்கள். இதற்கு ஏற்றார் போல அவருக்கு ஓய்வு கொடுத்து அக்சர் படேல் மீண்டும் கொண்டுவரப்பட்டு விட்டார்.

இந்த வகையில் தற்பொழுது பிசிசிஐ தெளிவான முடிவுகள் எடுத்து டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை உருவாக்குவதில் தயார் நிலைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. இதேபோல அணி தொடரும் என்றால் இந்திய டி20 அணி பலமானதாக மாறும்.

ஆப்கான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா ( கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான்.