டி20 உலககோப்பை 2024.. இந்திய அணிக்குள் வர கேஎல்.ராகுல் மாஸ்டர் பிளான்.. லிஸ்ட்லயே இல்லையே!

0
363
Rahul

ஒரு காலகட்டத்தில் உலக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் பேட்டிங் செய்வது என்பது பெரிதாக எதிர்பார்க்கப்படாது. ஆஸ்திரேலியா அணியின் ஆடம் கில்கிரிஸ்ட் வந்த பிறகுதான், ஒவ்வொரு அணியும் தங்கள் விக்கெட் கீப்பர்கள் பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி வந்த பிறகுதான் அந்தக் குறை சரியானது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக, இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர்களாக வந்த எல்லோருமே, குறைந்தபட்சம் சராசரியான பேட்ஸ்மேன்களாகவாவது இருந்தார்கள். இப்பொழுதும் அப்படியே தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது இந்திய அணிக்கு நல்ல விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களாக இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ரிஷப் பண்ட் என ஒருபுறம் வழக்கமான கீப்பர்கள் வரிசைக்கட்டி இருக்கிறார்கள்.

இன்னொரு புறம் பகுதிநேர விக்கெட் கீப்பராக இருந்து தற்போது முழு நேர விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுல் மாறி ஆச்சரியம் தந்திருக்கிறார். நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முழுக்க விக்கெட் கீப்பிங் பொறுப்பை அவரே கவனித்தார். மேலும் அதில் சிறப்பாகவும் செயல்பட்டு இருந்தார்.

இதன் காரணமாக அவர் வருகின்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் அவரே முழு நேர விக்கெட் கீப்பராக களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் துவக்க வீரராக இருந்து தன்னை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும் கீழே இறக்கிக் கொண்டிருக்கிறார். தற்பொழுது விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்கின்ற வகையில், 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற ஒரு புதிய திட்டத்தை கேஎல் ராகுல் தீட்டி இருக்கிறார்.

அடுத்த வருடம் டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடக்க இருக்கின்ற ஐபிஎல் தொடரில் கேப்டனாக தான் தலைமை தாங்கும் லக்னோ அணியின் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு கேட்டிருக்கிறார். விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், டி20 உலக கோப்பை இந்திய அணியில் அவர் விக்கெட் கீப்பிங் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இடம்பெறவும் வாய்ப்பு இருக்கிறது.

தற்பொழுது மேல் வரிசையில் விக்கெட் கீப்பருக்கு இடம் கிடையாது. கீழ் வரிசையில் ஜிதேஷ் சர்மா மட்டுமே விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருக்கிறார். எனவே அவர் சரியாக செயல்படாவிட்டால், கேஎல் ராகுல் நல்ல முறையில் செயல்பட்டால், அவருக்கு டி20 உலக கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். எனவே இதற்காக ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் மிடில் ஆர்டரில் விளையாட அவர் விரும்புகிறார் என்று தெரிய வருகிறது!