இன்று டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த உலகக் கோப்பை வெற்றி குறித்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேசியிருக்கிறார்.
மேலும் இந்த வெற்றியின் மூலமாக கபில்தேவ், தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகிய உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள் வரிசையில் சூரியகுமார் யாதவ் இடம்பெற்று இருக்கிறார்.
இவர்கள் ஒப்படைத்தார்கள்
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “இன்று நடந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இது மிக நீண்ட பயணம். 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதும் ஜெய் சா மற்றும் ரோஹித் பாய், மேலும் சிலர் கேப்டன் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதற்குப் பிறகு இது ஒரு நீண்ட பயணம். இந்த மைதானத்தில் சாதித்தது ஒரு சிறப்பான உணர்வு”
“நாங்கள் உலகக் கோப்பையை வெல்லும் அணி என்கின்ற அழுத்தம் எங்களுக்கு இருந்தது. ஆனால் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து சிறப்பான கிரிக்கெட் விளையாடி வருவது எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் இதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று முடிவு செய்தோம்”
வீரர்களை புரிந்து கொள்ள வேண்டும்
“சஞ்சு, அபிஷேக் மற்றும் வருண் போன்ற வீரர்களை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களால் தனி ஒரு வீரராக போட்டியை வெற்றி பெற்று கொடுக்க முடியும். அதேபோல பும்ரா, ஹர்திக் மற்றும் அக்சர் ஆகியோர் இந்த அணியுடன் நீண்ட வருடங்களாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்பது நன்றாக தெரியும்”
“கடந்த போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருது பும்ராவுக்கு கொடுக்கப்பட வேண்டும் என சஞ்சு சாம்சன் சொல்லியிருந்தார். பும்ரா ஒரு தலைமுறையில் ஒரு முறை மட்டுமே வரக்கூடிய ஒரு வீரர். அவர் இந்த நாட்டின் மிகப்பெரிய செல்வம். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். அவர் இப்படியே தொடர்ந்து சிறப்பாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.






