நேற்று இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது இனி இந்தியா பாகிஸ்தான் போட்டியை ரிவல்ரி என்று சொல்லக்கூடாது எனக் கூறியிருக்கிறார்.
நடப்பு ஆசிய கோப்பை இரண்டாவது சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் முதல் பத்து ஓவர் பேட்டிங் செய்த பொழுது இந்திய நடிகர் வெற்றி எளிமையாக உறுதி ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
எட்டுக்கு ஏழு
கடைசியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதி இருக்கும் எட்டு போட்டிகளில் இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் மழையின் காரணமாக முடிவு தெரியாமல் போயிருக்கிறது. பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட இந்திய அணியை இதில் வெல்லவில்லை.
இதன் காரணமாக இந்திய பக்கத்தில் இருந்து பல முன்னாள் வீரர்களும் இந்தியா பாகிஸ்தான் போட்டி முன்பு போல மிகவும் கடுமையானது கிடையாது, பாகிஸ்தான் மிகவும் பலவீனமான ஒரு அணி என தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் பத்திரிகைகளும் மீடியாக்களும் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் போட்டியை பெரிதுபடுத்தி பேசி வருகின்றன.
பாகிஸ்தான் போட்டி கிடையாது
இந்த நிலையில் நேற்று இது குறித்து பேசி இருந்த இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தயங்காமல் பேசி இருக்கிறார். அவர் கூறும் பொழுது “முதலில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை ரிவல்ரி என சொல்லாதீர்கள். இரு அணிகளும் பதினைந்து இருபது போட்டிகளில் 7-7, 7-8 என்று இருந்தால் ரிவல்ரி என சொல்லலாம்”
இதையும் படிங்க : இந்தியா எங்கள அந்த இடத்திலயே முடிச்சிட்டாங்க.. இனி இலங்கைக்கு வெயிட்டிங் – பாக் கேப்டன் சல்மான் பேச்சு
“ஆனால் நீங்களே நிலைமையை பாருங்கள். இப்போது 10-0 என இருந்தால் உங்களால் எப்படி அதை ரிவல்ரி என சொல்ல முடியும்? எனவே இனிமேல் அப்படி சொல்லாதீர்கள்” என வெளிப்படையாகவே கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.






