சூறாவளி மாதிரி ஆடும் நீங்கள், லக்னோ பிட்ச்சில் வாலை சுருட்டிக்கொண்டு ஆடியது எப்படி? – சூரியகுமார் யாதவ் பதில்!

0
2053

லக்னோ பிட்சில் மந்தமாக ஆடியது ஏன்? அதிரடி எங்கே போச்சு? என்கிற கேள்விகளுக்கு சூரியகுமார் பதில் கொடுத்திருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து அணிகள் விளையாடும் டி20 தொடரில், இரண்டாவது டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த மைதானம் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. ஏனெனில் பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத அளவிற்கு பிட்ச்சில் டர்ன் மற்றும் பவுன்ஸ் அதிகமாக இருந்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நூறு ரன்கள் இலக்கு என்பது மிகவும் எளிதும் இந்திய அணி இதை ஈசியாக சேஸ் செய்து வென்றுவிடும் என எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் முதல் இன்னிங்சில் சுழல்பந்து வீச்சிற்கு எப்படி டர்ன் மற்றும் பவுன்ஸ் ஆனதோ, அதைவிட அதிகமாக இரண்டாவது இன்னிங்சில் இருந்தது. ஆனாலும் இந்திய வீரர்கள் நிதானமாக எதிர்கொண்டு விளையாடினர். ஆட்டம் மிகப்பெரிய சவாலாகவும் இருந்தது. கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது. 19.5 வது ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சூரியகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் நின்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இதில் சூரியகுமார் யாதவ் வழக்கத்திற்கு மாறாக, 31 பந்துகள் பிடித்து 26 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

வழக்கமாக 150 பிளஸ் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சூரியகுமார் யாதவ், இவ்வளவு நிதானமாக ஆடியது இதுவே முதல் முறையாக தெரிகிறது. இரண்டாவது டி20 போட்டியில் எதற்காக இவ்வளவு நிதானம் காட்ட வேண்டும்? மைதானத்தில் அப்படி என்ன பிரச்சனை இருந்தது? என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார் சூரியகுமார் யாதவ்.

“எனது அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. அதிரடி மட்டுமே எனது அணுகுமுறை அல்ல. அன்றைய போட்டிக்கு என்ன தேவை என்பது தான் எனது அணுகுமுறை.

அதேநேரம் பந்துவீச்சாளர்கள் என்னை கட்டுப்படுத்த விடமாட்டேன். அது எனக்கு அழுத்தத்தை கொடுத்து விடும். ஆகையால் நான் அவர்களை எனது அதிரடி மூலம் கட்டுப்படுத்த முயற்சிப்பேன். இரண்டாவது டி20 போட்டியில் இப்படி நிதானமாக விளையாடியதற்கு காரணம் அந்த போட்டியில் அதுதான் தேவைப்பட்டது.

லக்னோ மைதானத்தில் பந்து வழக்கத்திற்கு மாறாக டர்ன் ஆனது. எந்த நேரமும் தவறு நடந்து விடலாம் என்று நிதானத்துடன் விளையாடினேன். இறுதியில் அணியின் வெற்றிக்கு உதவியது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

மைதானத்தைப் பற்றி எனக்கு ஒருபோதும் கவலை இல்லை. எனது கவலை எல்லாம் என்னுடைய பேட்டிங் எனது கன்ட்ரோலில் இருக்கிறதா? இல்லையா? என்பது மட்டும் தான். போதுமானவரை பேட்டிங்கை எனது கன்ட்ரோலில் வைத்துக் கொள்ள முயற்சிப்பேன். இரண்டாவது டி20 போட்டி முற்றிலும் சவாலாக இருந்தது. இது போன்ற சவாலான ஆட்டத்தை எதிர்கொள்வதற்கு எனக்கு ஆவலாகவும் இருக்கும்.” என்றார்.