ஒருநாள் போட்டியில் தடுமாறும் சூர்யகுமார்.. ரவி சாஸ்திரி சொன்ன அட்வைஸ்

0
272

டி20 கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பும் சூரியகுமார் யாதவ், அதேபோன்ற தாக்கத்தை ஒரு நாள் கிரிக்கெட்டில் ஏற்படுத்த தவறி வருகிறார். சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒரு ஆண்டிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்த சூரியக்குமார் யாதவ்,  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 49 பந்துகளில் சதம் விளாசினார். நடப்பாண்டில் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்,  ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் போன்ற பெருமையை சூரிய குமார் யாதவ் படைத்தார்.

- Advertisement -

இதன் மூலம் அவருக்கு ஒருநாள் போட்டியில் இடம் கிடைத்தது. எனினும் டி20 போட்டிகளில் ஏற்படுத்திய தாக்கத்தை அவர் ஒருநாள் போட்டியில் செய்யவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டியில் அவர் 4,34 , மற்றும் 6 ரன்கள் மட்டுமே அடுத்து இருந்தார். இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,

- Advertisement -


டி20 போட்டியை போல் இரண்டு மடங்கு உள்ளது தான் ஒரு நாள் போட்டி என்பதை சூரிய குமார் யாதவ் புரிந்து கொள்ள வேண்டும். டி 20 கிரிக்கெட் போல் அல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் உங்களுக்கு 30, 40 பந்துகளை கூடுதலாக பிடித்து ரன் சேர்க்க நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்.

எனவே சூரிய குமார் யாதவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கொஞ்சம் கூடுதல் நேரம் களத்தில் செலவிட வேண்டும். அப்போதுதான் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அடுத்த விஷயம் நீங்கள் எவ்வளவு நல்ல பார்மில் இருந்தாலும், ஆடுகளத்திற்கு ஏற்ப நீங்கள் விளையாட வேண்டும். ஆடுகள சூழலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். கிரிக்கெட் என்பது யாருக்காகவும் காத்திருக்காது. நீங்கள் ஆடுகள சூழலுக்கு ஏற்றவாறு மரியாதை தராமல் விளையாடினால் இன்று இல்லை நாளையோ நீங்கள் இதனை கடைப்பிடித்தே ஆகும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

ஒருநாள் கிரிக்கெட் கடினமே கிடையாது. வெறும் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தினாலே உங்களால் ரன் சேர்க்க முடியும். சூரிய குமார் யாதவ் ஒரு அறிவுபூர்வமான கிரிக்கெட் வீரர். அவர் இந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன். இது அவருக்கு பெரிய கஷ்டமாக இருக்காது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.