இந்திய கிரிக்கெட்

சூரியகுமார் சர்பராஸ் கானுக்காக செய்த காரியம்.. இந்திய கிரிக்கெட்டில் என் லட்சியம் இதுதான்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டார். அதே சமயத்தில் அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார். இந்த நிலையில் தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலத்திற்காக மிக முக்கியமான முடிவு ஒன்றை சூரியகுமார் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி சூரியகுமார் யாதவிடமிருக்கும் அதிரடியான பேட்டிங் திறமையை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என ஒருநாள் கிரிக்கெட் அணியில் கொண்டு வந்தது மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாய்ப்புகள் கொடுத்தது. ஆனால் அவரால் இரண்டு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இப்படி இருந்த போதிலும் டி20 கிரிக்கெட்டில் அவருடைய இடம் மிக உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் கொண்டுவரப்பட்டு இலங்கை அணிக்கு எதிராக முதல் தொடரையும் வென்று விட்டார்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து முன்கூட்டியே நாடு திரும்பிவிட்ட அவர் தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலத்திற்காக மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் சிகப்பு பந்து வடிவத்தில் நடைபெறும் புச்சி பாபு டெஸ்ட் தொடரில் மும்பை அணிக்காக விளையாட முடிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சூரியகுமார் யாதவ் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியில் “நான் இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன். புச்சி பாபு தொடரில் விளையாடுவது இந்த சீசனில் சிவப்பு பந்து கிரிக்கெட் தொடர்களுக்கு எனக்கு நல்ல பயிற்சியாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : தேவைப்பட்டா இவங்களை மாத்தவும் தயங்க மாட்டோம்.. முக்கியமா அந்த தைரியம் இருக்கணும் – ரோகித் சர்மா விளக்கம்

மேலும் மும்பை அணியின் கேப்டன் ரகானே மற்றும் பிரிதிவிஷா ஆகிய முன்னணி வீரர்கள் இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இதன் காரணமாக இளம் வீரர் சர்ப்ராஸ் கான் மும்பை அணியின் கேப்டனாக தற்பொழுது இந்த தொடருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். சூரியகுமார் மும்பை அணிக்கு திரும்பியதும் சர்ப்ராஸ் கான் தொடர்ந்து கேப்டனாக இருக்கட்டும் என்றும், தனக்கு கேப்டன் பொறுப்பு வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இளம் வீரரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என சூரியகுமார் எடுத்த முடிவு பலரால் பாராட்டப்படுகிறது.

- Advertisement -
Published by

Recent Posts