தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் பேட்ஸ்மேனாக இன்னும் கொஞ்சம் சரி செய்து கொள்ள வேண்டும் என்று முகமது கைப் தெரிவித்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 22 பந்துகளை விளையாடிய சூரியகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியில் அவர் நல்ல பேட்டிங் டச்சில் தெரிந்தார். ஆனால் அவர் அரை சதம் அடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
கடந்த சில டி20 தொடர்களாக சூரியகுமார் யாதவ் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் வந்து கொண்டிருந்தார். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நான்காவது இடத்தில் வந்தார். இந்த நிலையில் அவர் பேட்டிங் விளையாடும் பொசிஷன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதங்கள் நடக்கிறது.
இதுகுறித்து முகமது கைப் பேசும்பொழுது ” சூரியகுமார் யாதவ் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வரும் பொழுது அவரது புள்ளி விபரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவர் தொடர்ந்து நான்காவது இடத்தில் வருவது சரியான ஒன்றாக இருக்கும். மேலும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆறு முதல் ஏழு ஓவர்கள் ஆடிவிட்டால், மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவை அனுப்பலாம். புதிய பந்தில் முதல் விக்கெட் விழுந்தால் திலக் வர்மாவை அனுப்பி வைக்கலாம்”
“தற்போது சூரியகுமார் யாதவ் ஒரு இன்னிங்ஸ் சிறந்த முறையில் விளையாடி காட்ட வேண்டும். அவருக்கு அது இன்னும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அவர் மிகச் சிறந்த பேட்மேன் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அவர் 50, 60 ரன்கள் எடுக்க வேண்டும்”
இதையும் படிங்க : சாம்சனுக்கு சோதனை தீரவில்லை.. திலக் வர்மாவால் இப்பதான் பெரிய பிரச்சனையே ஆரம்பிச்சிருக்கு – இந்திய முன்னாள் வீரர் கருத்து
“சூரியகுமார் யாதவ் போட்டியை வென்ற பிறகும் கூட வீரர்களிடம் அந்த போட்டியில் எந்தெந்த இடங்களில் யார் என்ன தவறு செய்தார்கள் எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்? என்று பேசிக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு கேப்டனாக நல்ல ஆர்வம் இருக்கிறது. அவர் சிறந்த ஒரு கேப்டனாக உருவாகி வந்திருக்கிறார். இது இந்திய அணிக்கு நல்ல விஷயம்” என்று கூறி இருக்கிறார்.