சூரியகுமார் காயம்.. வெளிவந்த அறிக்கை.. டி20 உலக கோப்பையில் பின்னடைவு?

0
857
Surya

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக காலில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா, உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக பேட்டிங் வரிசையை 8 வரையில் நீடிக்க முடியாதது இந்திய அணிக்கு இறுதிப்போட்டியில் பிரச்சினையாக அமைந்தது.

இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பாத காரணத்தினால், உலகக் கோப்பை தொடர் முடிந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கு, சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்தினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமனில் முடித்தது. மேலும் கேப்டன் பொறுப்பு சூரியகுமாரின் பேட்டிங்கில் எந்த அழுத்தத்தையும் உருவாக்கவில்லை என்பது நல்ல விஷயமாக அமைந்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் தனது நான்காவது சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்து அசத்தியிருந்தார். மேலும் அவரை முன்வைத்தே டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் பேட்டிங் யூனிட் வரையப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது காலில் காயமடைந்தார். அந்த நேரத்தில் அவரை மைதானத்தில் இருந்து தூக்கிச் சென்றார்கள். ஆனால் போட்டி முடிந்ததும் அவர் பேசுகையில் நடக்க முடிந்த அளவுக்கு நன்றாக இருக்கிறது என்று கூறி இருந்தார்.

- Advertisement -

ஆனால் தற்பொழுது, அவருடைய கணுக்காலில் கிரேடு 2 அளவில் தசைநார் கிழிந்திருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக அடுத்த ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் நடக்க இருக்கும் டி20 தொடரை சூரியகுமார் தவறவிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதற்கடுத்து அவர் எப்பொழுது அணிக்கு திரும்புவார் என்று கூறப்படவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், சூரிய குமாரின் சந்தேகத்திற்கு இடமான காயம், தற்பொழுது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது!