குடும்பத்துடன் தியாகம் செய்தோம்.. இன்னும் ஒரு ஆசை இருக்கு – சூர்யகுமார் உருக்கம்

0
545

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூரியகுமார் யாதவ், தனது கடந்த காலம் குறித்து பேசி இருக்கிறார். அதில் என் வாழ்க்கையில் பத்து பதினைந்து ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போது கடினமாக உழைத்தேன். அதற்கு கிடைத்த பரிசு தான் இப்போது நான் அனுபவித்து வருகிறேன். நான் மட்டுமல்லாமல் என் குடும்பமும் எனக்காக பல விஷயங்களை தியாகம் செய்திருக்கிறது. அதற்கெல்லாம் இப்போது பலன் கிடைத்திருக்கிறது என்று நினைத்தால் மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

நான் நல்ல மனநிலையில் இருக்கின்றேன். எனக்கு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தான் மிகவும் ஆசை. அதுதான் என் மனதிற்கு நெருங்கிய கிரிக்கெட். நான் மும்பை அணிக்காக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்திருக்கிறேன். என்னால் சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் விளையாட முடியும். கடந்த ஆண்டு கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு முன்பு நான் பயிற்சியில் ஈடுபட்டேன்.

- Advertisement -

அப்போது டிராவிட் என்னை பார்த்து நீ டெஸ்ட் கிரிக்கெட் நன்றாக விளையாடுவாய். ஆனால் சில ஷாட்களை மட்டும் விளையாடக் கற்றுக் கொள். பேட்டிங்கில் உன் தன்மையை மாற்ற தேவையில்லை. டெஸ்ட் போட்டியிலும் வீரர்கள் ரன் குவிக்க வேண்டும்.அதனால் எதையும் நினைத்து யோசிக்காதே என்றும் ராகுல் டிராவிட் எனக்கு அறிவுரை கூறினார். இதேபோன்று பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி எப்போது பேட்டிங் செய்ய சொன்னாலும் நாங்கள் வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்வோம்.

அவரும் என்னை பார்த்து நீ டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய வீரர் என்று பாராட்டி இருக்கிறார்.அவரிமிருந்து கிடைத்த பாராட்டை நான் பெருமிதமாக கருதுகிறேன் என்று சூரியகுமார் யாதவும் தெரிவித்துள்ளார். இன்று ரஞ்சி போட்டியில் மும்பை அணிக்காக சூர்யா விளையாடுகிறார். இதனால் இந்த போட்டியில் அவர் எப்படி ரன் குவிப்பார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.