சூர்யகுமாருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு..! எதிர்பாராத விதத்தில் அடிச்ச லக்.. விவரம்

0
966

இந்தியா ,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் இன்று டெல்லி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில்  ஆஸ்திரேலியா படுதோல்வி தழுவியது.

- Advertisement -

இதில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே சிறப்பாக இருந்தாலும் பல குறைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தொடக்க வீரர் கே எல் ராகுல் ,புஜாரா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இந்த நிலையில் சூரிய குமார் யாதவை தவிர மற்ற வீரர்கள் டெல்லி டெஸ்டில் விளையாடுவார்கள்  என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் நடுவரிசையில் அணிக்கு திரும்புவார் என கூறப்பட்டது. ஆனால்  தற்போது ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் இன்னும் குணமடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.அவருடைய மருத்துவ அறிக்கை இன்னும் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் டெல்லி டெஸ்டில் ஸ்ரேயாஸ் இடம் பெறுவது சந்தேகம். இதனை அடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சூரிய குமார் யாதவுக்கு தற்போது இரண்டாவது டெஸ்டில் களம் இறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் டெல்லி மைதானம் பவுண்டரிகள் சிறியதாக இருக்கும் என்பதால் சூர்யாவும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க நல்ல வாய்ப்பாகும். இது சூரியகுமார் யாதவுக்கு அக்னி பரீட்சை என கருதப்படுகிறது. எனினும் அவர் சொதப்பினால் மீண்டும் வெள்ளை நிற ஆடையை அணிந்து சிவப்பு நிற கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக காலடி எடுத்து வைப்பது சிரமம் ஆகிவிடும். ஸ்ரேயாஸ்  காயத்தால் மீண்டும் சூரிய குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதால் அவரை லக்கி மேன் என ரசிகர் பாராட்டி வருகின்றனர். சூர்யகுமாருக்கு ஒரே இடத்தில் தான் மச்சம், ஆனால் இன்னொரு வீரருக்கு மச்சத்தில் தான் உடம்பே இருக்கிறது. அவர் எப்படி விளையாடினாலும் அணியில் இடம் நிச்சயம். அது யார் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.

- Advertisement -