ஐபிஎல் 2023 சிறந்த லெவன்.. ரெய்னா தேர்வு செய்த அணி..தோனிக்கு இடமில்லை..அப்போ கேப்டன் யாரு?

0
1596

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் ஐபிஎல் நடப்பு சீசனில் சிறந்து விளங்கிய வீரர்களை சின்ன தல சுரேஷ் ரெய்னா தேர்வு செய்துள்ளார்.இதில் தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வாலையும் குஜராத் அணியின் சுப்மன் கில்லையும் யும் சுரேஷ் ரெய்னா தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று நம்பர் 3வது வீரராக ஆர் சி பி அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலியை தேர்வு செய்திருக்கிறார். இதேபோன்று மும்பை அணியின் அதிரடி நாயகன் சூரியகுமார் யாதவை நான்காம் இடத்திற்கும் ,கே கே ஆர் அணியின் அதிரடிவீரர் ரிங்கு சிங்கை ஐந்தாவது இடத்திற்கும் ரெய்னா தேர்வு செய்து இருக்கிறார்.

ஆறாவது வீரராக சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ரெய்னா தேர்வு செய்துள்ளார். 7வது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக நிக்கோலஸ் பூரானையும் ரெய்னா தனது அணியில் குறிப்பிட்டு இருக்கிறார். முகமது சமி, முகமது சிராஜ் மற்றும் சாஹலை பந்துவீச்சாளராக குறிப்பிட்டுள்ள ரெய்னா கேப்டன் விஷயத்தில் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார்.

சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடிய ரெய்னா , தோனியை கேப்டனாக தேர்வு செய்யாமல் ஹர்திக் பாண்டியாவை ஐபிஎல் 2023 ஆம் அணியின் கேப்டனாக  அறிவித்திருக்கிறார். இதேபோன்று சிஎஸ்கே அணியின் ருதுராஜ், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் கேமரான் கிரீன், பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா, சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிராணா, யாஷ் தாக்கூர் ஆகியோரை ரெய்னா கூடுதல் வீரராக சேர்த்திருக்கிறார்.

- Advertisement -

ஜாகிர் கான் தேர்வு செய்த அணியில் தோனியை கேப்டனாக அவர் தேர்வு செய்தார். ஆனால் சிஎஸ்கேவுக்காக விளையாடிய பார்த்திவ் பட்டேலும் தோனியை கேப்டனாக தேர்வு செய்யவில்லை. இந்தத் தொடரில் சிறந்த கேப்டனாக தோனி விளங்கிய நிலையில் அவரை பிளேயிங் லெவனிலே இரண்டு முன்னாள் சிஎஸ்கே வீரர்களும் சேர்க்காமல் விட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.