ஐபிஎல் 2025

தோனி அந்த பெரிய தப்பை செய்யல.. அவர் தியாகி.. இவங்கதான் அத செஞ்சாங்க – சுரேஷ் ரெய்னா விமர்சனம்

தற்போது சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு யார் முக்கிய காரணம் என்பது குறித்தும், இதில் மகேந்திர சிங் தோனிக்கு எந்தவித பங்கும் கிடையாது என்றும் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்களுடைய பழைய பல பெருமைகளை இழந்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு சிஎஸ்கே அணி மிக மோசமாக மெகா ஏலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மகேந்திர சிங் தோனியும் ஒரு முக்கிய காரணம் என வெளியில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு பங்கு கிடையாது

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது ” எப்பொழுதும் தோனி கடைசியாக முடிவுகள் எடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் சிஎஸ்கே அணியில் இருந்த வரையில் எந்த ஒரு ஏலத்திலும் பங்கு எடுத்ததில்லை. அது குறித்தான பேச்சு வார்த்தைகளிலும் நான் ஈடுபட்டதில்லை. வீரர்கள் தக்கவைப்பு சம்பந்தமாக மட்டுமே நான் பேசியிருக்கிறேன். ஒரு வீரருடன் தொடர்ந்து செல்லலாமா வேண்டாமா என்பது பற்றி மட்டுமே தோனியிடம் விவாதிக்கப்படும். ஆனால் அவர் எப்போதும் ஏலத்தில் பெரிய அளவில் தலையிடவில்லை”

“எப்பொழுதும் சிஎஸ்கே ஏலத்தை ஏலத்திற்கான குழுதான் அனைத்தையும் கவனிக்கிறது. நீங்கள் தோனி இல்லாமல் இப்படி எல்லாம் எதுவும் நடக்காது என்று நினைக்கலாம். அவர் அவர் நான்கைந்து வீரர்களின் பெயரை கூறலாம். அவர்களில் சில வீரர்கள் அணி நிர்வாகத்தால் தக்க வைக்கப்படலாம் அவ்வளவுதான். தற்போது அவர் ஒரு அன்கேப்ட் வீரராக குறைந்த பணத்திற்கு வந்து தன்னால் முடிந்த அனைத்தையும் 43 வது வயதிலும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்”

- Advertisement -

மற்ற பத்து பேரும் என்ன செய்கிறார்கள்?

“தோனி அணியின் பிராண்டிற்காகவும் தன்னுடைய பெயருக்காகவும் ரசிகர்களுக்காகவும் வந்து நாற்பத்தி மூன்றாவது வயதிலும் விளையாடுகிறார். இந்த வயதிலும் அவர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்து மொத்த அணியையும் தன்னுடைய தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்”

இதையும் படிங்க : இது நல்ல சயின்ஸ் இல்ல.. சிஎஸ்கே தோல்விக்கு முக்கியமான காரணம் இதுதான் – கோச் பிளமிங் பேச்சு

“18 கோடி முதல் பெரிய சம்பளம் வாங்கக்கூடிய யாரும் இதற்கு கேப்டனுக்கு பதில் சொல்லவில்லை. குறிப்பாக நீங்கள் இதுவரை தோல்வி கிடையாது அணிகளிடம் தோல்வி அடையும் பொழுது சில விஷயங்களை அலச வேண்டும். தற்போது அணியின் மேட்ச் வின்னர் யார்? அடுத்த போட்டியில் ஒரு வீரருடன் தொடர்ந்து செல்லலாமா? என முடிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் உங்களுடைய பழைய வீரர்களுடன் தொடர்ந்து பயணிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தொடர்ந்து தோல்விகள் வரத்தான் செய்யும். இப்படியான தவறுகள்தான் ஒவ்வொரு முறையும் நடக்கின்றன” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by