சச்சின் கிடையாது.. இந்த 3 பேர்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் – சுரேஷ் ரெய்னா ஆச்சரியமான தேர்வு

0
1071
Raina

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடந்த உலக லெஜென்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக்கில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக யுவராஜ் சிங் தலைமை தாங்கிய இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த இந்திய அணியில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் இடம்பெற்று இருந்தார். கிரிக்கெட்டில் மூன்று சிறந்த பேட்ஸ்மேன் தேர்வு செய்யுமாறு அவரிடம் கேட்ட பொழுது, அவர் மிகவும் நிதானமாக யோசித்து பிறகு சச்சின் பெயரை தவிர்த்து மூன்று பேட்ஸ்மேன்களை கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இங்கிலாந்தில் கடந்த வாரத்தில் ஆரம்பித்த உலக லெஜென்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. தங்களது முன்னாள் ஹீரோக்களை பார்ப்பதற்காக விளையாடிய 6 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களும் மைதானங்களுக்கு படையெடுத்து வந்து உற்சாகப்படுத்தியிருந்தார்கள்.

- Advertisement -

இந்தத் தொடரின் போது இந்தியா ஆஸ்திரேலியா மோதிய போட்டிக்கு பிறகு உலகின் சிறந்த மூன்று பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யுமாறு முதலில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் இடம் கேட்கப்பட்டது. அவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார்.

இதற்கு அடுத்து ஹர்பஜன் சிங் சிறந்த மூன்று பேட்ஸ்மேன்களாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா ஆகியோரை தேர்ந்தெடுத்திருந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ராபின் உத்தப்பாவிடம் கேட்கப்பட்ட பொழுது அவர் வெஸ்ட் இண்டீஸ் ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் பிரையன் லாரா ஆகியோரை தேர்ந்தெடுத்தார். இவர்கள் மூவரது தேர்விலுமே சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா இருவருமே இருந்தார்கள்.

இதையும் படிங்க : தம்பி வாஷிங்டன் சுந்தர்.. உனக்கு வாய்ப்பு தரும் நல்ல டீமை கண்டுபிடிச்சு சேரு – ஹர்ஷா போக்லே அட்வைஸ்

இதே கேள்வியைச் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ட பொழுது, மற்றவர்களை கொஞ்சம் நேரம் எடுத்து யோசித்து இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய மூன்று பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்தார். சச்சின் உடன் இணைந்து விளையாடி இருந்த பொழுதும் கூட சுரேஷ் ரெய்னா பழைய லெஜெண்ட்ஸ் யார் பெயரையும் கூறாதது ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -