தற்போது சிஎஸ்கே அணியின் மோசமான நிலைமைக்கு இருவர் தான் காரணம் என சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா மிகவும் வெளிப்படையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய 6 போட்டிகளை தோற்றுவிட்டது. எனவே ஏறக்குறைய அந்த அணி இருக்கும் நிலைமைக்கு பிளே ஆப் வாய்ப்பு என்பது சுத்தமாக கிடையாது என தெரிகிறது. முதல் அணியாகவும் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருக்கிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார்.
மிகப்பெரிய தவறு செய்த சிஎஸ்கே
கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டது. ஒரு வருடம் அந்த விதியில் பழகிய அணி நிர்வாகங்கள் அடுத்த வருடம் அந்த விதியை பயன்படுத்தி எப்படி அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பது என கடந்த வருடத்தில் செயல்படுத்தி காட்டினார்கள். எனவே கடந்த வருடம் முதல் ஐபிஎல் தொடரில் நிறைய ரன்கள் குவிக்கப்படுகிறது.
இப்படியான நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களுடைய பழைய டெம்ப்ளேட்டில் இருந்து மாறிக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து தோனி தலைமையில் எப்படி சென்றார்களோ அப்படியே செல்வதையே விரும்பினார்கள். இதன் காரணமாக மெகா ஏலத்தில் அவர்கள் வாங்கிய வீரர்களில் யாருமே பெரிய ஹிட்டர்கள் கிடையாது. ஒருவர் கூட முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடும் அணுகுமுறையை கொண்டவரும் கிடையாது. தற்போது சிஎஸ்கே அணியின் மோசமான நிலைமைக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த இருவரே காரணம்
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது “சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரும் சி எஸ் கே அணி நிர்வாகமும் ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த முறை சரியாக செயல்படவில்லை என்று நான் உறுதியாக நினைக்கிறேன். ப்ரியன்ஸ் ஆர்யா போன்ற பல இளம் வீரர்கள் இருந்தார்கள். ஸ்ரேயா ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் போன்ற முன்னணி வீரர்களும் இருந்தார்கள்”
இதையும் படிங்க : இந்திய இளம் பேட்ஸ்மேன்களை பார்த்து கவலையா இருக்கு.. ஐபிஎல்-ல் பிரச்சனை வந்துடுச்சு – சிஎஸ்கே பிளமிங் பேச்சு
“இப்படி ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளரும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் இருவரையும் வாங்காமல் தவற விட்டார்கள். மற்ற அணிகள் இப்பொழுது நல்ல இன்டன்ட் காட்டி விளையாடுகிறார்கள். ஆனால் சுத்தமாக சிஎஸ்கே அணியிடம் இல்லை. இந்த அளவுக்கு திணறும் சென்னை அணியை நான் பார்த்தது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






