டி20 உலக கோப்பை.. இந்த 29 வயது இந்திய வீரருக்கு இடம் உறுதி.. சின்ன தல சுரேஷ் ரெய்னா கணிப்பு

0
120

மொஹாலியில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மிரட்டலான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக ரன்கள் சேர்த்த போது, இந்திய அணியின் ஸ்பின்னர் அக்சர் படேல் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.

பவர் பிளே ஓவர்களுக்கு பின் அடுத்தடுத்து 2 ஓவர்களிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியாக 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிகளவு பனிப்பொழிவு இருந்ததால் எந்த பவுலருக்கும் பவுலிங் செய்வது எளிதாக இல்லை. இதனால் ரவி பிஷ்னாயால் கூட ரன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

- Advertisement -

ஆனால் பவர் பிளேவிலேயே அட்டாக்கில் வந்து குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார் அக்சர் படேல். தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் புறக்கணிக்கப்பட்ட அக்சர் படேல், மிகச்சிறந்த கம்பேக்கை கொடுத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

இந்த நிலையில் அக்சர் படேல் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசும் போது, பவர் பிளேவில் அக்சர் படேல் பவுலிங் செய்ய தொடங்கியுள்ளார். அதேபோல் எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவரது வேகத்தில் தொடர்ந்து வித்தியாசம் செய்து விக்கெட்டை கைப்பற்றுகிறார். குர்பாஸை வீழ்த்தியது அப்படிதான்.

என்னை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கான இடம் உறுதி செய்யப்பட்ட ஒன்றாக நினைக்கிறேன். அதேபோல் ஜடேஜாவை பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் எப்படி பார்க்கிறது என்பதும் முக்கியம். இங்கிலாந்து அணிக்கான 5 டெஸ்ட் போட்டிகள் தொடர் வரவுள்ளதால், அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஜடேஜா மிகப்பெரிய இன்பேக்டை கொடுக்கக் கூடிய வீரர். ஆனால் எல்லாமே அவர்களின் ஐபிஎல் தொடரை பொறுத்தது தான். மன உறுதி, பவுலிங், பேட்டிங் என்று அனைத்தும் ஐபிஎல் தொடரின் போது கவனிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை 49 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அக்சர் படேல், இதுவரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

மேலும் அக்சர் படேல் பற்றி பிரக்யன் ஓஜா பேசும் போது, அக்சர் படேல் ஆட்டத்தை மிகச்சிறப்பாக கணிக்கிறார். ஆட்டம் மாறுவதை அறிந்து உடனடியாக செயல்படுகிறார். நாம் அனைவரும் ஜடேஜா பற்றி அதிகமாக பேசி இருக்கிறோம். ஆனால் அக்சர் படேலின் இம்பேக்ட் பற்றி பேசியதில்லை. அவர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தியுள்ளார். ஜடேஜாவை போல் அவரும் சிறந்த ஃபீல்டர் என்று கூறியுள்ளார்.