நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மோதி இருக்கிறது. இந்த போட்டி நடப்பு ஐபிஎல் தொடரின் தலைவிதியையே மாற்றும் அளவுக்கு முக்கியமான போட்டியாக மாறி இருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டு அணிகளும் இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மோதிக்கொள்ள இருக்கின்றன.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் தலா 8 போட்டியில் விளையாடிய 6 வெற்றிகள் உடன் 12 புள்ளிகள் எடுத்து முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றன. பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் எடுத்து அடுத்த இரண்டு இடங்களில் இருக்கின்றன.
இந்த நிலையில் லக்னோ அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள் உடன் 10 புள்ளிகள் எடுத்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த ஆறாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் நான்கு வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. எனவே இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டி புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதுடன், மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்புக்கும் அடித்தளமாக அமைய கூடியதாக இருக்கிறது.
இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் பட்சத்தில் அந்த அணி 9 கோட்டிகளில் ஐந்து வெற்றிகள் உடன் ரன் ரேட் அடிப்படையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும். மேலும் எட்டு போட்டிகளில் ஐந்து வெற்றிகள் உடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இருக்கும்.
இந்த நிலையில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களது ஒன்பதாவது ஆட்டத்தில் தோல்வியடையும் பொழுது, இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் பொழுது, அந்த அணி நான்காவது அல்லது மூன்றாவது இடத்திற்கும் முன்னேற முடியும். புள்ளி பட்டியலில் ஒரு கட்டத்தில் ஒன்பதாவது இடத்தில் இந்த மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு முன்னேற முடிவது என்பது மிகப்பெரிய மாற்றமாக அமையும்.
இதையும் படிங்க : நாம ஜெயிக்கிறோம்.. ஆனா நீங்க செய்ற இந்த தப்ப கேப்டனா ஏத்துக்க முடியல.. கோப்பை கிடைக்காது – அக்சர் படேல் பேச்சு
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி எல்லா வகையிலும் சிறந்த வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கிறது. ஒருவேளை இன்றைய போட்டியில் வென்று முதல் நான்கு இடங்களுக்குள் நுழைய முடிந்தால், அந்த அணி மேற்கொண்டு முதல் இரண்டு இடங்களுக்குள் நுழையவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஐந்து கோப்பைகளை வென்ற அனுபவம் கொண்ட அந்த அணி இதை பயன்படுத்திக் கோப்பையை வென்றாலும் ஆச்சரியம் இல்லை. எனவே இன்றைய போட்டி மற்ற ஒன்பது அணிகளின் தலையெழுத்தை தீர்மானிப்பதாக மாறி இருக்கிறது.