ஐபிஎல் 2025

300 ரன்கள் இலக்கை நீங்கதான் செட் பண்றீங்க.. இது நடக்கலனா அதுக்கு வாய்ப்பு இல்ல – முத்தையா முரளிதரன்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கிறது. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் 300 ரன்கள் இலக்கு குறித்து சுழற் பந்து வீச்சு பயிற்சியாளரும் ஆலோசகரமான முத்தையா முரளிதரன் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

300 ரன்கள் முடியுமா

கடந்த ஐபிஎல் சீசன் முதல் மிக வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே மிகவும் வலிமையான அடித்தளத்தை அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடுகின்றனர். அதற்குப் பின்னர் களமிறங்கும் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் தனது அதிரடியை வெளிப்படுத்த எதிரணிகளுக்கு சன் ரைசர்ஸ் மெகா ரன்களை இலக்காக நிர்ணயிக்கிறது.

கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த அணியாக சன்ரைசர்ஸ் அணி மாறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் மூன்றாவது இஷான் கிசானும் சன்ரைசர்ஸ் அணியில் நுழைய கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் முன்னணி அணியாக திகழ்கிறது. இந்த சூழ்நிலையில் 280க்கும் அதிகமாக மூன்று முறை சன்ரைசர்ஸ் அணி எடுத்துள்ளதால் 300 ரன்கள் டி20 கிரிக்கெட்டில் குவித்து வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

முத்தையா முரளிதரன் பேட்டி

எனவே இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் குவிக்குமா என்பதை அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகருமான முத்தையா முரளிதரன் சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் குவிக்க வேண்டும் என்றால், ஆட்டத்தில் இரண்டு பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று முத்தையா முரளிதரன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:என்ன பேசுறீங்க.. எங்க பேட்டிங் ஆர்டர் வீக்கா?. ஒரு போட்டியை வெச்சு சொல்வது தவறு – டெல்லி வீரர் பேட்டி

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பத்திரிகைகள் எங்களுக்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயத்துள்ளன. ஆனால் நாங்கள் அதை நெருங்கி அடைந்து விட்டோம். 286 மற்றும் 287 என இலக்கை நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். எனவே 300 ரன்கள் இலக்கு நடக்குமா? என்று தெரியாது. ஆனால் இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அந்த இலக்கை அடைய வேண்டும். கிரிக்கெட்டை பொருத்தவரை முடியாது என்று எதுவும் இல்லை” என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by