இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில் 37 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளுமே ப்ளே ஆப் சுற்றும் வாய்ப்பை இழந்துவிட்டன. இருந்தபோதிலும் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் முடிப்பதற்காக இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரண்டு அணிகளுக்கும் முக்கியமாக இருக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது.
ஹெட் அபிஷேக் ஷர்மா அதிரடி
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் முதலில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் நான்கு பவுண்டர்கள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஹைதராபாத் அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 41 பந்தில் 92 ரன்கள் வந்தது.
இதைத்தொடர்ந்து இன்னொரு முனையில் ஹெட் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் ஆறு பவுண்டர்கள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் கிளாசன் உடன் இணைந்து இரண்டாவது விக்கட்டுக்கு 35 பந்தில் அதிரடியாக 83 ரன்கள் கொண்டுவர உதவியாக இருந்தார்.
ஹென்றி கிளாசன் சரவெடி
இதைத்தொடர்ந்து ஒரு முனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய ஹென்றி கிளாசன் பவுண்டரி சிக்ஸர்களாக அடித்து மிரட்டினார். வெறும் 37 பந்துகளை மட்டும் சந்தித்து சதம் அடித்தார். மேலும் இறுதி வரை களத்தில் நின்று 39 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்ஸர்களுடன் 105 ரன்கள் குவித்தார். இவருக்கு இரண்டாவது ஐபிஎல் சதமாக பதிவானது. 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்திருக்கிறது.
மேலும் ஐபிஎல் தொடரில் கெயில் 30 பந்துகள், வைபவ் சூரியவன்சி 35 பந்துகள் வரிசையில் 37 பந்துகளில் சதம் அடித்து மூன்றாவது இடத்தை ஹென்றி கிளாசன் பிடித்திருக்கிறார். நான்காவது இடத்தில் யூசுப் பதான் 37 பந்துகள், ஐந்தாவது இடத்தில் டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : டிவிலியர்ஸ் எனக்கு உதவி செஞ்சிருக்கார்.. ஆனா நான் இருக்க விரும்புறது வேற மாதிரி – டிவால்ட் பிரிவிஸ் பேச்சு
மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இத்துடன் ஐந்தாவது முறையாக 250 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஆர்சிபி இரண்டு முறை 250 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் ஹைதராபாத் அணியே இருக்கிறது. கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக மூன்று விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 287 ரன்கள் கெடுத்ததே ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்பது குறிப்பிடத்தக்கது!






