ஐபிஎல் 2024

நான் விக்கெட் எடுத்தால் பெருசா கொண்டாட மாட்டேன்.. காரணம் சின்ன வயசுல கிடைச்ச இதுதான் – சுனில் நரைன் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வீரராக சுனில் நரைன் தாக்கம் நிறைந்தவிளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அவர் பங்களிப்பு கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்த நிலையில் விக்கெட் எடுத்தால் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடாதது ஏன் என்பது குறித்து காரணத்தை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு முதல் முறையாக சுனில் நரைன் வாங்கப்பட்டார். மேலும் 2018 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் வெளியே விடப்பட்ட அவர் 12.50 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் மீண்டும் வாங்கப்பட்டார். இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் வெளியே விடாமல் ஆறு கோடி ரூபாய்க்கு கொல்கத்தா மீண்டும் அவரை தக்க வைத்தது.

இப்படி அவருடைய ஐபிஎல் வாழ்க்கை மொத்தமும் கொல்கத்தா அணியுடன் ஆரம்பித்து தொடர்ந்து கொண்டு வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக ஆலோசகராக கம்பீர் வந்த பிறகு மீண்டும் சுனில் நரைன் துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டு வருகிறார்.

கம்பீர் எடுத்த இந்த முடிவிற்கு பெரிய அளவில் பலன் கிடைத்திருக்கிறது. மொத்தம் 11 போட்டியில் மூன்று அரை சதம் மற்றும் ஒரு சதத்துடன் சுனில் நரை 461 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். மேலும் பந்துவீச்சிலும் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்து ஆட்டத்தில் திருப்புமுனையை உண்டாக்கி வருகிறார்.

- Advertisement -

இப்படி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என நடப்பு ஐபிஎல் தொடரில் பல வெற்றிகளை அவர் கண்டு வந்த போதிலும், அது குறித்து அவர் மைதானத்தில் பெரிய கொண்டாட்டங்களில் ஈடுபடுவதே கிடையாது. இதை வைத்து ரசிகர்களும் நகைச்சுவையாக அவருக்கு மீம் போட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க : டி20 உ.கோ இந்திய அணியில் சாம்சன் ஸ்பெஷலா இருப்பார்.. காரணம் அவரை இப்படி ரெடி பண்ணி இருக்கோம் – சங்கக்கரா பேட்டி

விக்கெட் எடுக்கும் பொழுது கொண்டாட்டத்தில் ஈடுபடாத காரணம் குறித்து சுனில் நரைன் கூறும் பொழுது ” நான் வளரும் பொழுது என் தந்தையிடம் இருந்து எனக்கு கிடைத்த முக்கியமான பாடம் இது. இன்று நான் ஒருவரின் விக்கட்டை கைப்பற்றுகிறேன் என்றால், நாளை நான் அவருக்கு எதிராக மீண்டும் விளையாட வேண்டியது வரும். எனவே அந்த சூழ்நிலையை அனுபவிக்க வேண்டுமே தவிர, பெரிதாக அது குறித்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

Published by