ரோகித், விராட் கோலி அணியிலிருந்து திடீர் நீக்கம் ஏன்? கவாஸ்கர் சொன்ன காரணம்?

0
2176

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் இவ்விரு வீரர்களும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் இவ்விரண்டு வீரர்களும் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இனி சீனியர் வீரர்களுக்கு அணியில் இடம் இல்லை என்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், டி20 அணியில் விராட் கோலி,ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு இது முடிவு என்று சொல்ல முடியாது.

2023 ஆம் ஆண்டு முழுவதும் அவர்கள் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருந்தால் நிச்சயமாக அடுத்த டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவார்கள.இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறுகிறது. அதனை குறி வைத்து இந்த இரண்டு வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டிருக்கலாம். மேலும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதற்கு தயாராகும் விதமாக இரண்டு வீரர்களுக்கும் தீர்வு குழுவினர் டி20 போட்டிகளில் சேர்க்காமல் இருந்திருக்கலாம்.

இரண்டு வீரர்களின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு கை கொடுக்கும். இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய பிறகு இனி ஜூன், ஜூலை மாதத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

அதன் பிறகு 50 ஓவர் உலகக்கோப்பை முடிந்த பிறகு தான் இந்திய அணி மீண்டும் டி20 போட்டியில் விளையாடுகிறது. இதன் காரணமாக உலக கோப்பை வரை ரோகித் சர்மா ,விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் விளையாட மாட்டார்கள். அதன் பிறகு நடைபெறும் அனைத்து t20 போட்டிகளிலும் இவ்விரு வீரர்களும் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.