ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி ரன் எடுக்க செய்த மாற்றம் குறித்து சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்திருந்தார். இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 84 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.
விராட் கோலி இப்படி விளையாடினார்
முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி ரன் எடுக்காத காரணத்தினால் அவர் மீது நிறைய அழுத்தம் இருந்தது. மேலும் அவர் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் குறைந்து விட்டதாக வெளியில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது “விராட் கோலி பொதுவாக நேராக விளையாட விரும்பினார். இத்துடன் ஆப் ஸ்டெம்ப் லைனில் வந்த பந்துகளுக்கு அவர் அழகாக விளையாட நினைக்கவில்லை. மேலும் அவர் ஸ்கொயர் லெக் பகுதியில் விளையாடாமல் அந்த பந்துகளை மிட் ஆனில் நேராக விளையாடினார். இது அவர் பேட்டிங்கில் நிறைய தாக்கத்தை வசதியை உருவாக்கி விட்டது”
2027 உலகக் கோப்பை
“விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு தங்களை தயார் படுத்திக் கொண்ட விதத்தை பார்க்கும் பொழுது அவர்கள் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்புகிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது”
இதையும் படிங்க : 9 பேர் ஒற்றை இலக்கம்.. நடுவில் ஹாரி புரூக்கின் அதிசய பேட்டிங்.. ஆனாலும் சோகம் – நியூஸி வெற்றி
“அதுவரையில் என்ன நடக்கிறதோ நடக்கட்டும். அவர்கள் ரன்கள் எடுக்க வில்லை என்றால் கூட அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் இருக்கும் திறமையை கருத்தில் கொண்டு இந்திய ஒருநாள் அணியில் உலகக்கோப்பை வரையில் இடம் கொடுக்க வேண்டும். அவர்களை உலகக் கோப்பையில் விளையாட வைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






