சூரிய குமாரை தப்பா கணக்கு போட்டுட்டீங்க.. அவருக்கு அந்த அதிர்ஷ்டம் கூட தேவையில்லை – கவாஸ்கர் பாராட்டு

0
4
Surya

இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு அதிர்ஷ்டம் கூட தேவையில்லை என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் ஒரு போட்டியில் 30 ரன்கள் தாண்டி எடுத்திருந்தார். அவர் மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

மிகப்பெரிய தாக்கம்

சூரியகுமார் யாதவ் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய பேட்டிங் யூனிட்டில் மிகப்பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. அவர் யாருடனாவது இணைந்து நடுவில் 20 ரன்கள் எடுத்தாலும், அங்கு 50 ரன் பார்ட்னர்ஷிப் மேல் வரிசையில் வந்து விடுகிறது. மேலும் இந்திய அணி 8 முதல் 10 ஓவர்கள் விளையாடி முடித்து விடுகிறது.

இதன் காரணமாக இந்திய அணிக்கு கைவசம் விக்கெட்டுகள் இருக்க மேற்கொண்டு பத்து ஓவர்கள் விளையாட வேண்டியதாக இருக்கிறது. இதனால் கடைசி பத்து ஓவர்களில் இந்திய அணி அதிரடியாக விளையாட முடிகிறது. எதிர்பார்த்ததை விட 10 முதல் 20 ரன்கள் கூடுதலாக அடிக்க முடிகிறது. இது எதிரணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி விடுகிறது.

- Advertisement -

அதிர்ஷ்டம் கூட தேவையில்லை

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது ” இரண்டாவது டி20 போட்டியில் அவர் விளையாடிய பேட்டிங் அவருக்கு தேவையான தன்னம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. நிச்சயமாக அவர் பேட்டிங் ஃபார்மில் குறைவாக இருக்கவில்லை; ரன்கள்தான் அவரிடம் குறைவாக இருந்தது என்று காட்டியிருக்கிறார்”

இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மா கடவுளின் குழந்தை.. நீ பணிவா இருக்காதப்பா.. யுவராஜ் சிங் ரெக்கார்டு காலியாகும் – அஸ்வின் கருத்து

“அவர் வலைப்பயிற்சியில் சிரமப்படவில்லை பந்தை எல்லா பக்கத்திலும் அடித்து விளையாடி வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு போட்டியில் அது வேலை செய்யாமல் போயிருக்கிறது. சிலருக்கு மீண்டு வருவதற்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் தேவையாக இருக்கிறது. ஆனால் சூரியகுமார் யாதவுக்கு அப்படியான அதிர்ஷ்டம் எதுவும் தேவைப்படவில்லை. அவருக்கு இப்படியான ஒரு இன்னிங்ஸ்தான் தேவையாக இருந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -