இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய இந்திய இளம் வீரர் சுப்மான் கில் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று துவங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி எதிர்பாராத விதமாக அவுட் ஆகி வெளியேற, அதற்கு பின்னர் களம் இறங்கிய விராட் கோலி மற்றும் கில் கூட்டணி நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தது. முதலில் பந்து தேய்ந்து விட்டால் அதற்குப் பிறகு ரன்கள் குவிப்பது சுலபம் என்று உணர்ந்த ஜோடி மிகவும் நிதானமானஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த நிலையில் கில் 63 பந்துகள் விளையாடி 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயனின் பந்துவீச்சில் தேவையில்லாமல் இறங்கி வந்து விளையாட முயற்சித்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார். இது ஓரளவு மீண்டு வருவது போல் இருந்த இந்திய அணியை மீண்டும் சிக்கலில் தள்ளியது. இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கில் ஆட்டமிழந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “கில் நாதன் லயன் வரும் வரை வெளியேறி விளையாட முயற்சிக்கவில்லை. அவர் பந்தை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யாமல் அடியெடுத்து வைத்து விளையாட வேண்டும் என்று முன்பே முடிவு செய்து விட்டார். நான் அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்தேன். அப்போது நான் கில் விளையாடுவதை பார்க்கும் போது கடைசி பந்தில் ஒரு லாப்ட் ஷாட் விளையாட முயற்சிப்பார் என்று உணர்ந்தேன்.
இதையும் படிங்க:நிச்சயம் பும்ரா எங்களை விட மாட்டார்.. கண்டிப்பா இது நடக்கும்.. காரணம் இதான் – வெப்ஸ்டர் கருத்து
நான் நினைத்தது போலவே அவர் அதை விளையாட முயன்று இறங்கி வந்தார். ஆனால் பந்து அவரை விட்டு தூரத்தில் இருந்தது. அதை விளையாட முயற்சிக்கும்போது ஸ்லிப் திசையில் பிடிபட்டு வெளியேறினார்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். அவர் வெளியேறிய பிறகு விராட் கோலியும் 17 ரன்னில் வெளியேற, அதற்குப் பிறகு சிக்கலில் சிக்கிய இந்திய அணி மீண்டு வரவில்லை. இறுதியாக கேப்டன் பும்ராவின் ஓரளவு அடியான ஆட்டத்தால் 185 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.






