ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என இரண்டு அணிகள் வலுவாக இருப்பதால் கோப்பையை வெல்லக்கூடிய அணி குறித்து சுனில் கவாஸ்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவான அணியாக இருந்து வருகிறது. ஒரு சில வீரர்களை மட்டுமே நம்பாமல் ஒரு குழுவாக அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பினை சிறப்பாக செய்து வருகிறார்கள். இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7 போட்டிகள் வெற்றி மற்றும் மூன்று போட்டிகள் மட்டுமே தோல்வி என புள்ளிகள் பட்டியலில் டாப் லிஸ்டில் இருக்கிறது.
அதேபோல மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணியை பார்க்கும்போது தொடக்கத்தில் நான்கு தோல்விகளை சந்தித்தாலும் அதற்குப் பிறகு மும்பை அணியின் எழுச்சியால் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியில் கீழே இருந்த மும்பை அணி அதற்குப் பிறகு டாப் லிஸ்ட் கோதாவில் இறங்கி இருக்கிறது. அனைத்து துறைகளிலும் வலுவாக இருக்கும் இந்த இரண்டு அணிகளில் பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வெல்லவாய்ப்பு இருப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறும்போது ” என்னை பொருத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை ஜெயிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவர்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங் துறையில் மிகவும் சிறப்பான முறையில் இருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுக்கு அருகில் இருக்கிறார்கள். ஆனால் மும்பை அணி இப்போதுதான் தங்களது எழுச்சியை தொடங்கியுள்ளது. மூன்று அணிகளுக்கு எதிராக மூன்று கடினமான போட்டிகள் இருப்பதால் அவர்கள் அதை தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பது தான் இப்போது இருக்கும் கேள்வியாகும்.
இதையும் படிங்க:ஒரு கேப்டனா என் மேலயும் தப்பு இருக்கு.. 2 விஷயத்தில் கோட்டை விட்டோம்.. தோல்விக்கான காரணம் குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ்
அந்த வேகத்தை அவர்கள் எப்படி தாங்கிக் கொள்கிறார்கள் என்பதுதான். எனவே இதை வைத்துப் பார்க்கும்போது பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வெல்லும்” என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். பெங்களூர் அணி இன்று நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.