சிராஜ் பிரசித் கிருஷ்ணா 6 விக்கெட் எடுக்கலாம்.. ஆனா பும்ரா இல்லனா இதை செய்யவே முடியாது – கவாஸ்கர் பேட்டி

0
378

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா காயமடைந்திருப்பது இந்திய அணிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா ஐந்தாவது டெஸ்ட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த பும்ரா அதுக்கு அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை அமையவில்லை என்றாலும் பந்துவீச்சில் இந்திய அணிக்கு தனது அபார திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் ரோகித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று பும்ரா சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சினால் 181 ரன்கள் மட்டுமே குவித்தது. இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் பும்ரா முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியின் பாதியில் இருந்தே வெளியேறினார். அவருக்கு பதிலாக விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தினார். இந்த சூழ்நிலையில் பும்ரா விளையாடவில்லை என்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் வெற்றி பெறுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தாக்கம் ஏற்படுத்த பும்ரா தேவை

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “கிரிக்கெட்டில் வேடிக்கையான விஷயங்கள் நடந்துள்ளதால் இது சாத்தியமாகாது என்று நான் கூறவில்லை. கிருஷ்ணா ஏமாற்றம் அளிக்கும் முதல் ஸ்பெல்லுக்குப் பிறகு அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்மித் ஆகியோரை அற்புதமாக வீழ்த்தினார். அவர் தனது பந்துவீச்சினால் திறம்பட செயல்படலாம். ஆனால் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு பும்ரா இங்கு அவசியமாக தேவைப்படுகிறார்.

இதையும் படிங்க:ஒரு ஓவர் இருக்கு.. நான் சொன்னதை அவருக்கு செய்யுங்க.. ஆஸி வீரரை வீழ்த்த பும்ராவிற்கு ஐடியா கொடுத்த கோலி

பும்ரா ஏற்படுத்திய விளைவை சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஏற்படுத்த முடியாது” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் சிராஜ் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொடக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்த பும்ரா அவசியம் தேவை என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -