இந்திய கிரிக்கெட்

வருண் ஒரு மாயாஜாலகாரர்.. அவர் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும் தான் – கவாஸ்கர் புகழ்ச்சி

இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மாயாஜாலக்காரர் என்றும் ஆனால் அவர் ஒரு முக்கியமான விஷயத்தை செய்ய வேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் பாராட்டி அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ரன் கொடுத்திருந்தாலும் இரண்டு முக்கிய விக்கெட் கைப்பற்றி நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் கையில் பந்து இருக்கும்பொழுது இந்திய அணிக்கு விக்கெட் கிடைப்பது இயல்பான விஷயமாக இருக்கிறது.

வருண் சக்கரவர்த்தியின் ஆதிக்கம்

2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு கிடைத்த வாய்ப்பை அவரால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் அவரால் இந்திய அணிக்குள் வர முடியாமல் இருந்தது. கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்ததும் உடனடியாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்திய டி20 அணிக்கு சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிகளும் இடம் பிடித்து சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது டி20 உலக கோப்பை தொடர் இருப்பதால் டி20 அணியில் மட்டுமே இடம்பெற்று வருகிறார். ஆனால் இதற்கு அடுத்து அவர் தொடர்ந்து 50 ஓவர் கிரிக்கெட் விளையாடுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

மாயாஜால பவுலர்

இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு குறித்து பாராட்டி பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. ஆனால் அவர் அது குறித்து கவலைப்படாமல் மார்க்கை நோக்கி பந்து வீசுவதற்கு மீண்டும் திரும்பி நடந்து போனார். இது உண்மையிலேயே சிறந்த அறிகுறி. அவர் உண்மையிலேயே ஒரு மாயாஜாலகாரர். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் அவர் அபாரமாக பந்து வீசுகிறார்”

இதையும் படிங்க : 2வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீர் பரிசோதனை செய்வாரா? இன்னொரு காம்பினேஷன் இறக்கப்படுமா?

“டி20 வடிவமோ அல்லது 50 ஓவர் கிரிக்கெட் வடிவமோ ரன்கள் கொஞ்சம் சென்றால் கூட வருண் சக்கரவர்த்தி அதைப்பற்றி மட்டும் கவலைப்படவே கூடாது. அடுத்த ஓவரில் நான் இரண்டு விக்கெட் கைப்பற்றுவேன் என்ற நம்பிக்கையுடன் எப்பொழுதும் போல அவர் தொடர்ந்து பந்து வீச வேண்டும். இதை மட்டும் அவர் செய்தாலே போதும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by