சுனில் கவாஸ்கர் வெளியிட்ட 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி – அனுபவ வீரர் தவான் புறக்கணிப்பு

0
408
Shikar Dhawan and Sunil Gavaskar

தற்போது இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக அமைந்த இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் t20 உலகக்கோப்பைக்கு பயிற்சி எடுக்கும் வண்ணமாக ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த பின்பு அக்டோபர் 17ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. டி20 உலக கோப்பை வென்று சுமார் 14 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த முறை இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க காத்திருக்கிறது.

இதற்கான இந்திய அணி நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர் தனது 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டார். கடந்த 25 தொடர்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் கவஸ்கர் வெளியிட்ட அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக கேப்டன் விராத் கோலியே துவக்க வீரராக என் அணியில் செயல்படுவார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மற்றொரு துவக்க வீரராக ரோகித் செயல்படுவார் என்று அவர்கள் கூறியுள்ளார். யாருக்காவது காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக துவக்க வீரராக ராகுல் செயல்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மூன்றாம் நிலை வீரரான இடத்தில் சூரியகுமார் விளையாட வேண்டும் என்றும் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். 4ஆம் மற்றும் 5ஆம் இடத்திற்கான வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை தான் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். முறையே குருணல் பாண்டியா மற்றும் ஹார்திக் பாண்டியா என இருவரும் மிடில் ஆர்டரில் ஆட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். க்ரூணல் ஆல்-ரவுண்டராக இருப்பதாலும் இடதுகை பேட்ஸ்மேன் ஆக இருப்பதும் அணிக்கு மிகவும் பலன் தரும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். விக்கெட் கீப்பராக பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டருக்கான இடத்தில் சுந்தர் மற்றும் ஜடேஜா என இரண்டு வீரர்களை கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். இதில் சுந்தர் தற்போது விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சுக்காக 6 வீரர்களை கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ஷமி, புவனேஸ்வர், தீபக் சஹர் மற்றும் ஷர்துல் தாகூர் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்கள் ஆக ராகுல் சஹார் மற்றும் சஹாலை தேர்வு செய்துள்ளார். குல்தீப் மற்றும் ராகுல் சகார், கவாஸ்கரின் அணியில் இடம்பெறவில்லை.

கவாஸ்கரின் டி20 உலகக்கோப்பை அணி – ரோகித், கோலி, ராகுல், சூர்யகுமார், க்ரூணல், ஹார்திக், பண்ட், சுந்தர், ஜடேஜா, பும்ரா, ஷமி, புவனேஸ்வர், தீபக் சஹர், ஷர்துல் தாகூர், சஹால்.