சூர்யா கேட்ச் பக்கா.. நீங்க உங்க டீம் செய்த 10 பிராடு வேலைகளை கவனிங்க – ஆஸி பத்திரிக்கைக்கு கவாஸ்கர் பதிலடி

0
1486
Gavaskar

இந்திய அணி நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்றது. இந்த தொடரின் இறுதி போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யா எல்லைக்கோட்டில் பிடித்த கேட்ச் பெரிய சர்ச்சையான விவகாரமாக மாறியது. தற்பொழுது இந்த கேட்ச் பற்றி விமர்சனம் செய்திருந்த ஆஸ்திரேலியா பத்திரிக்கை ஒன்றுக்கு சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

சூரியகுமார் யாதவ் டேவிட் மில்லருக்கு பிடித்த கேட்ச்க்கு பல கோணங்களில் ஐசிசி வீடியோ வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இரண்டையும் விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சுனில் கவாஸ்கர் தன் பங்குக்கு ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்றைக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது ” இறுதிப் போட்டியில் டேவிட் மில்லரை அவுட் செய்த சூரியகுமார் யாதவ் கேட்ச் பற்றி ஆஸ்திரேலியா பத்திரிக்கை ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. சூரியகுமார் பிடித்த கேட்ச் எல்லா வகையிலும் மிகச் சரியாக இருந்தது. அவர் பந்தை சரியான நேரத்தில் காற்றில் வீசி, மீண்டும் எல்லைக்கோட்டில் இருந்து வந்து சரியாக பிடித்தார்.

எனவே சூரியகுமார் கேட்ச் படித்ததை பற்றி யாரும் பெரிதாக கேள்விகள் கேட்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா பத்திரிக்கையில் அந்தக் கட்டுரையை எழுதியவர் மட்டும் அப்படியான கேள்விகள் வந்தது. சூரியகுமார் யாதவை நோக்கி விரல்களை நீட்டுவதற்கு முன்னால்,ஆஸ்திரேலியா வீரர்கள் செய்த அப்பட்டமான 10 ஏமாற்று வீடியோக்களை அவர் பார்க்கலாம்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரை வென்று இந்திய அணி t20 உலகக் கோப்பை வறட்சிக்கு மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்த தொடர் முழுக்க தோற்காமல் இருந்து வந்து வென்று இருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் எவ்வளவு பசியுடன் இதற்கு காத்திருந்தார்கள்? என்று தெரிகிறது.

இதையும் படிங்க : நானும் ஹர்திக்கை விமர்சனம் செய்தேன்.. அதுக்கு காரணம் இதுதான்.. ஆனா வேற ஞாபகம் எனக்கு வருது – இர்பான் பதான் பேட்டி

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் கூட தோல்வி அடையாமல் வந்து இறுதிப்போட்டியில்தான் தோல்வி அடைந்தது. இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவத்தில் அதிக பட்டங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக இந்திய அணிக்கு இருக்கும் பெஞ்ச் வலிமைக்கு இது செய்யக்கூடிய ஒன்றுதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -