தோனிக்கு மட்டும் தான் எல்லா பாராட்டும்.. ரோகித் சர்மாவை யாரும் கண்டுக்கவே இல்ல..கவாஸ்கர் வேதனை

0
5382

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக வழிநடத்தும் ரோகித் சர்மாவுக்கு தோனியை போல் எந்த பாராட்டுகளும் கிடைப்பது இல்லை என சுனில் கவாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் குவாலிபையர் சுற்றில் 172 ரன்கள் சிஎஸ்கே அடித்திருந்த நிலையில் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் சி எஸ் கே அணி வீழ்த்தியது. இதற்கு தோனியின் கேப்டன்சி தான் காரணம் என பலரும் பாராட்டினர். இதேபோன்று லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்தது.

- Advertisement -

ஆனால் இதற்கு யாரும் ரோகித் சர்மாவை பாராட்டவில்லை. மேலும் மும்பை அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறி விட்டார்கள். இது மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரை வேதனை அடைய வைத்திருக்கிறது. இது தொடர்பாக பேசிய அவர் எப்போதுமே ரோகித் சர்மாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததே கிடையாது.

ஆனால் அவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை மும்பை அணிக்கு வென்று கொடுத்திருக்கிறார். நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். ஆயுஷ் பதோனி பந்து வீசும் போது ஆகாஷ் மத்வால் ஸ்டெம்பின் வலது பக்கம் திசையில் இருந்து ஓடி வந்து விக்கெட் எடுப்பார். அதுவே நிக்கோலோஸ் பூரான் பேட்டிங் செய்யும்போது ஸ்டெம்பின் இடது பக்கம் திசையில் ஓடி வந்து அவருடைய வீக்கெட்டை வீழ்த்தினார்.

இதற்கு முழு காரணம் ரோகித் சர்மா தான் எந்த பந்துவீச்சாளரும் இப்படி ஒவ்வொரு பந்துக்கும் மாறி மாறி வந்து வீசமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களுடைய பந்துவீச்சின் ரிதம்மை பாதிக்க செய்துவிடும். ஆனால் இடது கை பேட்ஸ்மேன் வந்தவுடன் இப்படி ஒரு மாற்றத்தை மத்வால் செய்து அந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

- Advertisement -

ஆனால் இதற்கு யாரும் ரோகித் சர்மாவை பாராட்டவே இல்லை. இதுவே சிஎஸ்கே போட்டியில் தோனி இருக்கும்போது இவ்வாறு நடந்திருந்தால் அனைவரும் தோனியால் தான் இந்த விக்கெட் கிடைத்தது என்று பாராட்டி இருப்பார்கள். ஆனால் ரோகித் சர்மா என்பதால் யாருமே கண்டு கொள்ளவில்லை.

இதேபோன்று நேற்றைய ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங் செய்த போது நேஹல் வதேரா இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். எப்போதும் முதலில் பேட்டிங் செய்யும் அணி எந்த பேட்ஸ்மேனையும் இம்பேக்ட் வீரராக கொண்டு வராது. ஆனால் ரோகித் சர்மா தான் இந்த மாற்றத்தை செய்தார். இதற்கும் அவரை யாரும் பாராட்டவே இல்லை என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.