இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் ஆட்டம் இழந்தது குறித்து இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 51 ரன்கள் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இதில் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் தங்கள் விக்கட்டை பொறுப்பற்ற முறையில் விளையாடி கொடுத்துவிட்டு சென்றார்கள்.
இந்திய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்
இன்று இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் கில் மற்றும் விராட் கோலி மூவரும் மிகவும் பொறுப்பற்ற முறையில் விளையாட விக்கெட்டை கொடுத்து இந்திய ரசிகர்களை பெரிய அளவில் வெறுப்பேற்றி இருக்கிறார்கள். விராட் கோலி வழக்கமாக ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை விரட்டி ஆட்டம் இழப்பது போலவே இந்த முறையும் ஆட்டம் இழந்தார்.
இதற்கு முன்பாக கில் ஸ்டார்க் வெளியில் வீசிய ஒரு பந்தை ஸ்லைஸ் செய்யச் சென்று தேவையில்லாமல் விக்கெட்டை இழந்தார். முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கியது. இதற்குப் பிறகு விராட் கோலியின் பொறுப்பற்ற முறையில் விளையாடியதால் இந்திய அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டது.
இமேஜை டிரஸ்சிங் ரூமில் விடுங்கள்
கில் ஆட்டம் இழந்த விதம் குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது ” கில் உங்களுடைய இமேஜை நீங்கள் டிரஸ்சிங் ரூமில் விட்டு விடுங்கள். நீங்கள் செட் ஆவதற்கு முன்பாக சில ஷாட்டுகள் மிகவும் அபாயமானவை. மேலும் உங்களால் விக்கெட் எப்படி செயல்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியாது”
இதையும் படிங்க : ரோகித் கம்பீருக்கு ஒற்றுமை இல்ல.. இந்திய அணிக்குள் வேற மாதிரி இந்த விஷயம் நடக்குது- பாகிஸ்தான் பசித் அலி பேச்சு
“கில் செய்தது ஒரு மோசமான ஷாட் செலக்சன். இதை நீங்கள் நல்ல கேட்ச் என்று சொல்லலாம். அவருக்கு அந்த இடத்தில் கொஞ்சம் துரதிஷ்டமும் இருந்தது. அந்தப் பந்தை அவர் விட்டு விடலாம். அது கீப்பருக்கு சென்றிருக்கும். இவர் பெவிலியனுக்கு செல்லாமல் இருந்திருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.






