தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முழு முக்கிய காரணம் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் என்று அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றை எட்டியுள்ள இத்தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் முடிவில் இரண்டு போட்டிகளில் 2 வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி துரதிஷ்டவசமாக கடைசி ஓவரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் வெற்றி பெற்றிருந்தால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும்.
இரு அணியிலும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் சிறப்பாகவே அமைந்தது. நடுவில் ஒரு பாட்னர்ஷிப் அமைந்தது தான் தென்னாப்பிரிக்க அணிக்கு சாதகமாக மாறியது. குறிப்பாக மில்லர் மற்றும் மார்க்ரம் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் மார்க்ரம் குறைந்தது மூன்று அல்லது நான்கு முறை ஆட்டம் இழக்க வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இந்திய அணி அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. ரன் அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்பு தவறவிடப்பட்டது மிகப்பெரிய பாதகமாக இந்திய அணிக்கு மாறியது.
இந்நிலையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு கேட்ச் அல்லது பீல்டிங்கில் செய்த தவறு காரணம் இல்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே காரணம் என்று அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
“தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இந்திய அணி அப்போட்டியை இழந்ததற்கு காரணம் ஃபீல்டிங்கில் செய்த தவறு அல்லது கேட்ச் தவறவிட்டது இல்லை. அஸ்வினின் 4 ஓவர்கள் மட்டுமே மிகப்பெரிய காரணமாக உள்ளது.
140 ரன்களுக்கும் குறைவான இலக்கை கட்டுப்படுத்த வேண்டும் எனில் பந்துவீச்சில் அனைத்து பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாக வீசியாக வேண்டும். யாரேனும் ஒருவர் 40 ரன்களுக்கு அதிகமாக கொடுத்தால் அது தோல்விக்கு காரணமாகத்தான் முடியும். அந்த வகையில் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் என நான் கூறுவேன்.” என்றார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அஸ்வின், தனது 4 ஓவரில் 43 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது.