வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா காயத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டிங்கில் களமிறங்கி 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி அருகே வந்து தோல்வியை தழுவியது. ரோகித் சர்மாவின் இந்த தீர செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூரியகுமார் யாதவ் , ரோகித் ப்ரோ மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டிருப்பதாக பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் இந்த செயலுக்கு கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ரோகித் பேட்டிங் செய்ய திட்டமிட்டு இருந்தால் அவர் ஏன் ஒன்பதாவது இடத்தில் வந்து விளையாட வேண்டும். அதற்கு முன்பு வந்திருந்தால் இந்திய அணிக்கு இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்காது. ரோகித் சர்மா ஏழாவது வரிசையில் விளையாடி இருக்கலாம். ரோகித் சர்மா விளையாடுவாரா? இல்லையா? என்று தெரியாமலே அவருக்கு முன்னாள் களமிறங்கிய வீரர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
ரோகித் சர்மா பேட்டிங் செய்வார் என தெரிந்திருந்தால் அக்சர் பட்டேல் பொறுமையாக கடைசி வரை விளையாடு இருப்பார். நாம்தான் அடித்து ஆட வேண்டும் என தேவையில்லாத ஷாட் ஆடி அக்சர் பட்டேல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் சர்மா முன்பே பேட்டிங்கிற்கு வந்திருந்தால் மற்ற வீரர்களும் அதற்கு ஏற்ற வகையில் விளையாடியிருப்பார்கள். என் கேள்வி எல்லாம் உங்களால் பேட்டிங் செய்ய முடியும் என்றால் ஏன் இவ்வளவு தாமதமாக களத்திற்கு வந்தீர்கள். ரோகித் சர்மா தனது திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
இந்தியன் நேற்றைய போட்டியில் மறக்க முடியாத வெற்றியை பெற்றிருக்கக்கூடும் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே ஆட்டத்தின் 48வது ஓவரில் முகமது சிராஜ் பேட்டிங் செய்தார். அப்போது அவரால் ஒரு ரன் கூட , முஸ்பிகுர் ரஹிம் ஓவரில் எடுக்க முடியவில்லை. அந்த ஓவரில் ஒரு மூன்று பந்த்தை ரோஹித் சர்மா பிடித்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கக்கூடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.