நான் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கும்போது தோனி எங்கிருந்தோ வந்து கேப்டன் ஆகி விட்டார் ; காரணம் இதுதான் – யுவராஜ் சிங் அதிரடிப் பேச்சு

0
4681
MS Dhoni and Yuvraj Singh

இந்திய கிரிக்கெட்டில் சச்சின், கங்குலி, டிராவிட் என்பது எப்படி ஒரு தசாப்தத்தில் முக்கியமான பெயர்களாக விளங்கியதோ, அதேபோல் இவர்களுக்குப் பிறகு தோனி, யுவராஜ் சிங், சேவாக் பெயர்கள் முக்கியமான பெயர்களாக விளங்கின. இந்திய அணி பெற்றிருக்கும் முக்கியமான பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர்கள். இந்திய அணிக்குள் அதிகாரம் மிக்கவர்களாகவும் மாறினார்கள். இவர்களுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்துள்ளது என்று பலரும் யூகமாகச் சொல்வது உண்டு. சில நேரங்களில் சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங் என சில விசயங்களைப் பூடகமாகப் பேசியதும் உண்டு. இப்பொழு இது மாதிரியான சில விசயங்களை யுவராஜ் சிங்கும் பகிர்ந்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் ஐ.சி.சி நடத்தும் இருபது ஓவர், ஐம்பது ஓவர் உலகக்கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றிய என்றால், அதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங் என்றால் மிகையாகாது. முதல் இருபது ஓவர் உலகக்கோப்பையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டியில் யுலராஜ் சிங்கின் மிகச்சிறப்பான செயல்பாடுதான் கோப்பையை வென்று கொடுத்தது என்றே கூறலாம். 2011 ஐம்பது ஓவர் உலகக்கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதற்கும் முக்கியக் காரணம் யுவராஜ் சிங்தான். அந்தத் தொடரில் பேட்டிங்கில், பவுலிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு தொடர்நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணிக்கு துணை கேப்டனாக யுவராஜ் சிங் இருந்தார். அடுத்த இந்திய அணியின் கேப்டன் அவர்தான் என்ற பேச்சு பரவலாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 2007-ல் இருபது ஓவர் உலகக்கோப்பைக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இது அந்த சமயத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதுக்குறித்து தற்போது பேசியுள்ள யுவராஜ் சிங் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் “நான் அப்போது கேப்டனாகி இருக்க வேண்டும். ஆனால் அப்போதுதான் கிரேக் சாப்பலின் பிரச்சினை நடந்தது. இது சாப்பலா இல்லை சச்சினா என்று சூழ்நிலையை மாற்றிவிட்டது. பி.சி.சி.ஐ-யில் புதிய யாரையும் கேப்டனாக்கும் முடிவு இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் என்னை மட்டும் கேப்டனாக்க கூடாதென்று நினைத்திருக்கிறார்கள் என்று பின்பு கேள்விபட்டேன். ஆனால் என் அணியின் சகவீரரை நான் அப்போதும் ஆதரித்தேன். இந்தச் சமயத்தில் இங்கிலாந்து தொடரில் மூத்த வீரர் சேவாக்கும் இல்லை. அப்போது வரை துணை கேப்டனாக இருந்த நான் நீக்கப்பட்டேன். இதெல்லாம் ஏன் என்றே புரியவில்லை. ஆனால் அப்போது போல் இப்போது நடந்தாலும் என் அணியின் சகவீரரை நான் ஆதரிப்பேன்” என்று கூறியிருக்கிறார்!