ஒருநாள் தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் திடீர் விலகல்!

0
7640
ICT

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆட இருந்தது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது . இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டி தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே அறிவித்திருந்தது பிசிசிஐ இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை மனதில் வைத்து வலிமையான அணியை களம் இறக்க உள்ளது இந்தியா.இந்திய அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி கே எல் ராகுல் முகமது சாமி ஆகியோர் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருக்கின்றனர் .

- Advertisement -

காயம் காரணமாக கடந்த காலங்களில் அணியில் இருந்து விலகி இருந்த பும்ரா இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இறுதி நேரத்தில் சேர்க்கப்பட்டிருந்தார் . பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திற்கு பின் பயிற்சி பெற்று வந்த அவர் முழு உடல் தகுதியை பெற்று விட்டார் என்று அவரை ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்த்திருந்தது பிசிசிஐ..

பும்ரா இறுதியாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று இருந்தார் . அந்தத் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை.ஜஸ்பிரீத் பும்ரா அணியில் இடம் பெறாதது இந்திய அணிக்கு உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் பெரும் பின்னடைவாக அமைந்தது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மற்றும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் பும்ராவை ஒரு நாள் போட்டிக்கான அணியில் சேர்த்திருந்தது பிசிசிஐ. முதுகில் ஏற்பட்ட காயம் குணமாகி மீண்டும் தனது உடற் தகுதியை நிரூபிக்க தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார் பும்ரா.கடந்த வாரம் அவர் முழு உடற்பகுதியை அடைந்து விட்டார் என்று தேசிய கிரிக்கெட் அகாடமி சான்றிதழ் கொடுத்திருந்தது . இதனால் பும்ரா விரைவில் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது .

- Advertisement -

இந்நிலையில் கவுஹாத்தி சென்ற இந்திய அணியுடன் பும்ரா செல்லவில்லை. இதனால் பும்ரா இலங்கை அணியுடன் ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முழு உடல் தகுதியை அடைந்து விட்டார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பும்ரா அணியில் இருந்து விலகி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்களிடமும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் முதல் ஒரு நாள் போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டாரா அல்லது இந்த தொடரில் தொடரிலிருந்து முழுவதுமாக விளக்குகிறாரா என்று பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை