இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 8 போட்டி நாளை இரவு நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் வருண் சக்கரவர்த்தி குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலக கோப்பை தொடரில் லீக் ஆட்டங்களில் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் சூப்பர் 8 சுற்றில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. இருப்பினும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அரை இறுதி ரேசில் நீடிக்கிறது
எனவே நாளை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். இந்த சூழ்நிலையில் அணியின் துருப்புச் சீட்டாக கருதப்படும் வருண் சக்கரவர்த்தி கடந்த சில போட்டிகளாக தடுமாறி வருகிறார். அவரின் பந்து வீச்சு திட்டத்தை எதிரணியினர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனால் அவர் தனது திட்டத்தில் சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியம் பத்ரிநாத் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “வருண் தங்கள் சிந்தனையை மாற்ற வேண்டும். அவர் தொடக்கத்திலேயே கூக்ளி பந்தை வீசும் திட்டத்தோடு ஆரம்பிக்கிறார். அதனால் அங்கு அனைத்து பேட்டர்களும் தயாராக இருக்கிறார்கள். மேலும் அவரை லெக் சைடில் அடித்து நொறுக்க தயாராக இருக்கிறார்கள். எனவே அவர் தனது திட்டத்தை மாற்ற வேண்டும் முதல் பந்தை கூக்லி வீசுவார் என்று அனைவரும் கண்டுபிடித்து விட்டனர்.
எனவே இதில் அவர் சீராக இருப்பதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது பும்ரா மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வருணுக்கு மோசமான நாள் என்றால் அக்ஷார், அர்ஸ்தீப், பும்ரா நன்றாக பந்து வீச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக தயாராகுவார் என்று நம்புகிறேன் ஏனென்றால் இந்த மர்மத்தை வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் அவ்வளவாக கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது” என்று அவர் பேசியிருக்கிறார்.