இந்திய கிரிக்கெட்

சிஎஸ்கே கிடையாது.. இந்த ரெண்டு டீம்தான் ஏலத்துல சூப்பர்.. கப் அடிக்கவும் வாய்ப்பு – பத்ரிநாத் கணிப்பு

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இரண்டு அணிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாகவும், அதில் ஒரு அணி கோப்பையை வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாகவும் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே வின் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது. இதன் காரணமாக அவர்கள் ஒட்டுமொத்த அணியையும் மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள். அவர்கள் இந்த மினி ஏலத்திற்கு இரண்டாவது அதிகபட்ச தொகையுடன் வந்தார்கள். ஆனாலும் உறுதியாக பிளே ஆப் சுற்றுக்கு வருவார்களா? என்று கூற முடியாது.

இந்த இரண்டு அணிகள்தான்

இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இந்த ஏலத்தில் சிறப்பாக இருந்தன என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் மினி ஏலத்தில் சுறுசுறுப்பாக இருந்தீர்கள் என்றால் எங்கோ தவறு இருப்பதாக அர்த்தம். உங்களுக்கு மெகா ஏலத்தில் சரியான அணி அமையாவிட்டால் தான் நீங்கள் மினி ஏலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு சரியான அணி இருந்தால் நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள். வெற்றி பெற்ற அணிகள் பல ஆண்டுகளாக இப்படித்தான் இருந்தன”

“இந்த வகையில் மும்பை அணியும் ஆர்சிபி அணியும் ஏலத்தில் அதிரடியாக நுழைந்தன. அவர்களுக்கு ஏற்கனவே நல்ல அணி அமைந்திருந்தது. ஏலத்திற்கு முன்பாகவே போட்டி நடந்தாலும் அவர்களுக்கு விளையாட வீரர்கள் இருந்தார்கள்”

- Advertisement -

இந்த அணி பைனல் வரும்

“வெங்கடேஷ் ஐயர் ஒரு மாற்று வீரராக ஆர்சிபி அணியில் இருக்கிறார் எனும் பொழுதே அவர்கள் எவ்வளவு வசதியாக இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு ஏலத்தில் நிரப்ப வேண்டிய எல்லா இடங்களையும் நிரப்பி விட்டார்கள். தற்போது மிகவும் செட்டில் ஆன அணியாக இருக்கிறார்கள்”

இதையும் படிங்க : கம்பீர் மேனேஜரா இருக்க முடியும்.. பயிற்சியாளரா இருக்க முடியாது.. அவர் அவ்வளவுதான் – கபில் தேவ் கருத்து

“தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று கேப்டன்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறைக்கும் அந்த அணியில் பலவீரர்கள் இருக்கிறார்கள். தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையை வென்றிருக்கிறார். அவர்கள் முதல் நான்கு இடங்களில் மட்டுமில்லை இறுதி போட்டிக்கு வராவிட்டால் நான் ஆச்சரியப்படுவேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by