வேறு எந்த ஐபிஎல் அணியும்.. இந்த இந்திய வீரரை இனி வாங்குவது சந்தேகம்தான் – முன்னாள் சிஎஸ்கே வீரர்

0
913

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத், ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

19ஆவது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இந்த தொடரில் இறுதிக்கட்ட இடங்களை பிடித்துள்ளன. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி இந்த தொடரில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர், கடந்த இரண்டு சீசன்களாக பேட்டிங்கில் படு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் கேப்டன்சியிலும் சொதப்பி வருகிறார். இந்த சூழ்நிலையில் அவரை அடுத்த வருடம் லக்னோ அணி நீட்டிக்க விரும்பாது எனவும் அதேபோல, இந்த விலைக்கு மற்ற அணி வாங்க முயற்சிக்காது எனவும் சிஎஸ்கே முன்னால் வீரர் பத்ரிநாத் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “லக்னோ அணிக்கு ரிஷப் பந்த் ஒரு பெரிய ஏமாற்றமாக மாறி இருக்கிறார். அவர்கள் இவரை விடுவிக்க வேண்டும் மேலும் அதிக விலைக்கு மற்ற அணி வாங்குமா என்பது சந்தேகமே அதனால் அவர் நிச்சயமாக ஏலத்திற்கு வருவார். இது முற்றிலும் கடினமான முடிவு தான் ஆனால் அந்த அணி ஏற்கனவே அதுல பாதாளத்திற்கு வந்து விட்டதால் இந்த முடிவை அவர்கள் எடுத்து தான் ஆக வேண்டும்.

மேலும் மார்கரம் மற்றும் மிச்சல் மார்ஸ் போன்ற சிறந்த கேப்டன்கள் அவர்களிடம் உள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் தேசிய அணிகளை வழி நடத்துகிறார்கள். பந்துடன் (27 கோடி), நிக்கோலஸ் பூரன் (21 கோடி) மற்றும் மயங்க் யாதவ் (11 கோடி) ஆகியோரையும் எல்.எஸ்.ஜி விடுவிக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் அவர்கள் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் பெறுவார்கள். எனவே ஒரு சிறந்த அணியை உருவாக்க இதுவே சரியான வழியாகும் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -