நேற்று சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கு கேப்டன் ருதுராஜ் கூறிய காரணத்தை நம்புவதற்கு தாங்கள் முட்டாள் கிடையாது என சுப்பிரமணியம் பத்ரிநாத் கடுமையான முறையில் பதில் அளித்திருக்கிறார்.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து ஐந்து விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி கடைசி இரண்டு ஓவர்களுக்கு 12 ரன்கள் எடுத்தால் போதும் என்கின்ற நிலையில் போட்டியை எளிதாக வென்றது.
ருதுராஜ் சொன்ன காரணம்
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து பேசி இருந்த ருதுராஜ் கூறும்பொழுது ” ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. மெதுவான பந்து கூட நின்று வந்தது. இதன் காரணமாக நாங்கள் எடுத்த 209 ரன்கள் போதும் என்று நான் நினைத்தேன். இதை வைத்து அவர்களை மறக்க முடியும் என்று தோன்றியது”
“இதன் காரணமாகவே நான் பேட்டிங் செய்யும்பொழுது கொஞ்சம் பொறுமையாக நேரம் செலவிட்டு விளையாட நினைத்தேன். பிறகு தாக்கி ஆடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் நான் தவறான நேரத்தில் ஆட்டம் இழந்து விட்டேன்” என்று கூறியிருந்தால்.
நாங்கள் முட்டாள்கள் கிடையாது
இதுகுறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “ஆடுகளம் மெதுவாக இருந்தது என்று கூறுவதை நம்புவதற்கு நாங்கள் என்ன முட்டாள்களா? ஆடுகளம் மெதுவாக இருந்தால் நீங்கள் எப்படி 209 ரன்கள் எடுக்க முடியும். அடுத்து அவர்கள் சேஸ் செய்யும் பொழுது ஒரு ஓவர், ஒரு பந்து கூட அழுத்தத்தில் இல்லை. அப்படி இருக்கும் பொழுது ஆடுகளம் எப்படி மெதுவாக இருந்திருக்க முடியும்?”
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை நீங்க முடிவு செய்யாதிங்க எங்களுக்கு தெரியும்.. பிரிவிஸ் தோனி வந்தா கதையே மாறிடும் – ஸ்டீபன் பிளமிங் பேச்சு
“சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் மிடில் ஆர்டரில் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக சிவம் துபே மட்டுமே இருக்கிறார். இதன் காரணமாக தான் அவசரப்பட்டு விளையாடி ஆட்டம் இழந்துவிட்டால் தங்கள் அணி 140 முதல் 160 ரன்னில் ஆட்டம் இழந்து விடும் என்று பயந்து கொண்டுதான் ருதுராஜ் மெதுவாக ஆடினார். இதற்கு ஆடுகளம் காரணம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.






