கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

அசத்தும் அர்ஸ்தீப் சிங் – விக்கெட்டுகள் வீடியோ லிங்க் உள்ளே!

பஞ்சாபைச் சேர்ந்த 23 வயதான இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் தற்போது இந்திய அணியின் கவனிக்கத்தக்க வேகப்பந்து வீச்சாளராக உருவாகி வருகிறார். இவரது துல்லியமான சிக்கனமான பந்துவீச்சு 20 20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வெற்றியை நோக்கி நகர்த்துவதற்கு மிக எளிதாக இருக்கிறது!

- Advertisement -

ஐபிஎல் தொடரில் நான்கு வருடங்களுக்கு முன் பஞ்சாப் அணியால் அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட இவர், இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக, பஞ்சாப் அணியால் 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார்!

கடந்த மூன்று வருடங்களில் ஐபிஎல் தொடரில் இவரது பந்துவீச்சு எடுத்து வைத்து பார்த்தால் பந்துவீச்சு எக்கானமி குறைந்து கொண்டே வந்திருக்கிறது அந்த அளவிற்கு இவர் தனது பந்து வீச்சை கூர்மையாக்கி கொண்டே வந்திருக்கிறார்!

கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இவரது விக்கெட் கைப்பற்றும் சராசரியும் ஒரு ஓவருக்கு ரன் விட்டுத் தரும் சராசரியும் மிகச் சிறப்பாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்பு சவுத்ஆப்பிரிக்கா உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் உம்ரான் மாலிக் அணியில் இருந்ததால் இவருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இறுதியாக இங்கிலாந்து உடன் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கடுத்து வெஸ்ட் இண்டீஸ் உடனான இருபது-20 தொடரில் தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் வாய்ப்பு பெற்று விளையாடி வருகிறார். இதில் ஒவ்வொரு ஆட்டங்களிலும் இவரது பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது!

இதுவரை 5 போட்டிகளில் 18.4 ஓவர்களில் அதாவது 112 பந்துகளில் 113 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்திருக்கிறார். இதில் 5 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் இரண்டு மெய்டன் ஓவர்களையும் வீசியிருக்கிறார்.

நேற்று வெஸ்ட் இண்டீஸ் உடன் நடந்த நான்காவது இருபது-20 ஆட்டத்தில் முதல் ஓவரில் 10 ரன்களை விட்டுத் தந்தவர், அடுத்த இரு ஓவர்களில் 2 ரன்களை மட்டுமே விட்டுத் தந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரது இந்த தொடர்ந்த சிறப்பான செயல்பாடு இவரை இந்திய 20 20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற செய்வது ஏறக்குறைய உறுதியாகவே தெரிகிறது. இன்றைய ஆட்டத்தில் அவரது சிறப்பான பந்துவீச்சு வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

Published by