கம்மின்ஸ் செய்ததை இந்திய பாகிஸ்தான் கேப்டன்கள் செய்தால் கதை முடிந்தது – பாகிஸ்தான் ஸ்பின்னர் அதிரடி கருத்து!

0
2845
Rohit sharma

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்பொழுது பாதி முடிந்திருக்கிறது. முதலில் நடைபெற்றுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று இந்திய அணி தொடரில் பலமான முன்னிலையை வகிக்கிறது!

இந்த டெஸ்ட் தொடரில் முதலில் நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

- Advertisement -

இதற்கடுத்து டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது போட்டி மொத்தம் இரண்டரை நாட்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது. இந்த இரண்டரை நாட்களில் இரண்டு நாட்கள் ஆட்டம் ஆஸ்திரேலிய அணிவசமே இருந்தது.

மூன்றாவது நாள் ஆட்டத்தின் துவக்கத்தின் போது ஆஸ்திரேலியா அணி 65 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 66 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. மேற்கொண்டு 150 ரன்கள் சேர்த்தினால் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறவே அதிகபட்ச வாய்ப்பு இருந்தது.

இப்படியான நிலையில் மேற்கொண்டு வெறும் 48 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒன்பது விக்கட்டுகளை பறிகொடுத்து 113 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி சுருண்டது. இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா எழு விக்கெட், ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட் என வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு முடிவுரை எழுதினார்கள். இதற்கு அடுத்து இந்திய அணி மிக எளிதாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தேவையில்லாமல் ஸ்வீப் விளையாடி விக்கட்டை பறி கொடுத்தார்கள். தற்பொழுது இது பெரிய அளவில் விமர்சனம் ஆகி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா கூறும்பொழுது
” ஆஸ்திரேலியா பேட்டர்களுக்கு ஸ்டம்பகளுக்கு முன்னால் எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை. அவர்கள் அனைவரும் ஸ்வீப் ஷாட் விளையாட முயற்சி செய்து ஆட்டம் இழந்தார்கள். கம்மின்ஸ் ஒரு கேப்டனாக இப்படித்தான் விளையாடி ஆட்டம் இழக்க வேண்டுமா? அவர் களத்திற்குள் வந்து அங்கிருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம் உடன் உரையாடி விட்டு சென்று முதல் பந்திலையே ஸ்லாக் ஸ்வீப் விளையாடி ஆட்டம் இழந்தார். ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியதால் அவர் அதைக் கேள்விப்பட்டு பயந்து போய்விட்டார் என்று நினைக்கிறேன். இவர் செய்ததை இந்தியா அல்லது பாகிஸ்தான் கேப்டன் செய்திருந்தால் அவர் நேராக நாடு திரும்ப வேண்டியதுதான்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்தத் தோல்வி ஆஸ்திரேலியாவை அழ வைக்கும். அவர்களை மீண்டு வர விடாது. ஒரு கட்டத்தில் அவர்கள் இந்திய அணியை விட மேலாதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும் இந்திய அணி எதிர்த்து போராடிய பொழுது அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்திய சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களிடம் பதில் இல்லை. அதனால் அவர்கள் கண்டபடி ஸ்வீப் விளையாடி ஆட்டம் இழந்தார்கள். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் இருவரும் அற்புதமாக பந்து வீசினார்கள். ரோஹித் சர்மா நிலைமையை புரிந்து கொண்டு இருவருக்கும் நீண்ட நேரம் பந்து வீச வாய்ப்பு தந்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் கார்டை பார்க்கும் பொழுது யாரோ ஒருவரின் செல்போன் நம்பர் போல் இருந்தது!” என்று கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்!