“இஷான் கிஷன் பெயரை கெடுக்கிற வேலையை நிறுத்துங்க.. அந்த பையன் திறமையானவர்” – கவாஸ்கர் காட்டம்

0
153
Ishaan

இந்திய அணி கடந்த ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவிற்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்தது.

அந்த சுற்றுப்பயணத்தில் இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருந்த இஷான் கிஷானுக்கு விளையாடுவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. மேலும் அவர் அடுத்த நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் மனச்சோர்வு காரணமாக தான் அடுத்து நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்பவில்லை என்று கூறி, இந்திய அணியில் இருந்து ஓய்வு வாங்கி இஷான் கிஷான் வெளியில் வந்துவிட்டார்.

இந்த நிலையில் அவரை இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் தேர்வுக்குழு இஷான் கிஷான் பெயரை பரிசீலிக்கவில்லை. மேலும் அவர் ரஞ்சித் தொடரில் விளையாடுவார் என்று டிராவிட் கூறியிருந்தார். ஆனால் இஷான் கிஷான் ரஞ்சி தொடரிலும் தற்பொழுது ஜார்க்கண்ட் அணிக்கு விளையாட வில்லை.

இது தொடர்பாக பேசியிருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “தென்னாபிரிக்காவில் இருந்து ஓய்வு கேட்டு இந்தியா திரும்பி வந்த இஷான் கிஷான் மீண்டும் எப்பொழுது கிடைக்கப் போகிறார் என்பது குறித்து எந்த உறுதியான தகவல்களும் இல்லை. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி தன்னுடைய ஃபார்மை நிரூபிக்க வேண்டும் என்று டிராவிட் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஒழுக்க விதி மீறல் காரணமாக அவர் வெளியேற்றப்படவில்லை என்பதை ராகுல் டிராவிட் திட்டவட்டமாக உறுதியாக மறுத்திருக்கிறார். இது ஒரு இளைஞனின் பெயரை மேலும் கெடுக்காது என்று நம்பலாம். அவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் எந்த மட்டத்தில் கிரிக்கெட் விளையாடவும் மிகக் கடினமாக உழைக்கிறார்கள். எனவே ஒரு இளைஞனின் பெயரை யூகத்தால் கெடுக்காமல், அவர் குறித்த உண்மை தகவல்களை பெற வேண்டியது ஊடகங்கள் கடமையாகும். மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவர் மீண்டும் வந்து நம்மை விளையாடி மகிழ்விக்க ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இஷான் கிசானை தேர்வு செய்யாமல் இந்தியத் தேர்வுக்குழு அதிரடியாக 22 வயதான உத்திரபிரதேசத்தை சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜூரலை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்திருக்கிறது. இசான் கிஷான் விஷயத்தில் நிறைய யூகங்கள் வெளியில் சென்று கொண்டிருப்பது உண்மை!