“நிறுத்துங்க முதல்ல.. ரோகித்தை உருவாக்கியதா தோனியே சொல்ல மாட்டார்..!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி கருத்து!

0
3403
Dhoni

இந்திய கிரிக்கெட்டில் திறமை இருந்தும் நீண்ட நாட்கள் தன்னை வெளிப்படுத்த முடியாமல் இருந்த வீரர்களில் ரோகித் சர்மா மிகவும் முக்கியமான ஒருவர். அவருக்கு பின்னால் வந்த விராட் கோலி நட்சத்திர வீரராக உயர்ந்து 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்ற பொழுது ரோகித் சர்மா புறக்கணிக்கப்பட்டார்.

இன்று அதே ரோகித் சர்மா 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை கேப்டனாக இருந்து வழி நடத்துகிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி ரோஹித் சர்மா இடத்தில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாவ்லாவை ஒரு கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக வேண்டி கேட்டு சேர்த்துக் கொண்டார். இது சமீபத்தில் தேர்வுக்குழுவில் இடம் பெற்று இருந்த உறுப்பினர் ஒருவரால் வெளியிடப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இதே மகேந்திர சிங் தோனி தான் 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தினேஷ் கார்த்திக் பயிற்சி ஆட்டத்தில் இரண்டு சதங்கள் அடித்து இருந்த பொழுது கூட, ரோகித் சர்மாவுக்கு துவக்க வீரராக வாய்ப்பு கொடுத்தார். அந்த இடத்திலிருந்து ரோகித் சர்மாவின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையும் மாறியது.

இந்த நிலையில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசிய இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறும் பொழுது ” ரோகித் சர்மா கேரியரை தான் உருவாக்கினேன் என்று மகேந்திர சிங் தோனி ஒரு இடத்தில் கூட சொல்ல மாட்டார். எனக்கு தோனியை பற்றி தெரியும். ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்ததால் மற்றவர்கள் அப்படி சொல்லலாம். ஏன் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார் என்று பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அவருக்குத் தெரியும்.

- Advertisement -

எனது கேரியரில் மட்டுமில்லாமல் அனைவரது கேரியரில் கூட மகேந்திர சிங் தோனிபங்கு என்பது இருக்கிறது. அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் ஏன்? அப்படி அவர் சொன்னார் என்று பார்க்க வேண்டும். ஏனென்றால் அந்த வீரர்களை ஆதரித்தால் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என்று அவருக்குத் தெரியும்.

ரோகித் சர்மா கேப்டன்சி பற்றி நான் அதிகம் பேச மாட்டேன். அவர் ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை கேப்டனாக வென்று தன்னை அதில் நிரூபித்து இருக்கிறார். அதுதான் அவர்களுக்கு இருக்கும் அணி நிர்வாகமும், அவர் எப்பொழுதும் அதை சுற்றி இருக்கும் விஷயங்களும்!” என்று கூறி இருக்கிறார்!