8 இன்னிங்ஸ் 171 ரன்.. இந்திய அணிக்கு எதிராக.. ஸ்டீவ் ஸ்மித் இந்த இடத்தில்தான் களம் இறங்குவார் – ஜார்ஜ் பெய்லி அறிவிப்பு

0
115
Smith

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களமிறங்குவார் என ஆஸ்திரேலிய தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்ற பிறகு, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிய துவக்க ஆட்டக்காரரை கொண்டு வராமல் ஸ்மித்தை துவக்க ஆட்டக்காரராக கேப்டன் கம்மின்ஸ் மாற்றினார். இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் புதிய துவக்க ஆட்டக்காரரை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

8 இன்னிங்ஸ் 171 ரன்கள்

ஸ்டீவ் ஸ்மித் நான் டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ஒரு அரைசதத்துடன் மொத்தம் 171 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் அவர் மிகப்பெரிய வீரராக ரன்கள் குவித்து சாதித்திருக்கிறார்.

தற்பொழுது ஸ்மித் இடத்தில் பேட்டிங் வரிசையில் விளையாடி வந்த கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆறு மாதங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா பேட்டிங் யூனிட்டில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஜார்ஜ் பெய்லி அறிவிப்பு

இது குறித்து ஆஸ்திரேலியா தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறும்போது “பேட் கம்மின்ஸ் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், மேலும் ஸ்டீவ் ஸ்மித் என எல்லோரும் தனித்தனியாக துவக்க ஆட்டக்காரராக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது குறித்து விவாதித்து வருகிறார்கள். இதில் ஸ்மித் துவக்க இடத்தில் விளையாட விரும்பவில்லை என்று வெளிப்படையாக தெரிகிறது. எனவே அவர் அந்த இடத்தில் விளையாட மாட்டார்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : பாபர் அசாம் விஷயத்தில்.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு செய்தது முட்டாள்தனமானது – மைக்கேல் வாகன் விமர்சனம்

மேலும் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் துவக்க ஆட்டக்காரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விருப்பமில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்த நிலையில் புதிய துவக்க ஆட்டக்காரரை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு இருக்கிறது. இந்த இடத்திற்கு கேமரூன் பான்கிராப்ட், மார்க்கஸ் ஹாரிஸ் அல்லது இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

- Advertisement -