நாயகன் மீண்டும் வர்றார் ! 18 மாதங்கள் கழித்து டெஸ்ட்டில் சதம் விளாசியுள்ள ஸ்டீவ் ஸ்மித் ! டான் பிராட்மேன், சச்சினுக்கு பின் சாதனைப் பட்டியலில் நுழைவு

0
254
Steve Smith century

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தப் பின் தற்போது டெஸ்ட் தொடரை கைப்பற்றும் எண்ணத்தில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது மற்றும் கடைசி டெஸ்ட், கல்லே மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் 5 ரன்னிலும் கவாஜா 37 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர். வெளிநாட்டு மைதானத்தில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார். 104 ரன்கள் எடுத்தப் பின் டிக்வெல்லாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் 12 மற்றும் கிரீன் 4 ரன்கள் மட்டுமே சேர்த்து வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். மறுமுனையில் நிலைத்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தைப் பதிவு செய்து நாயகன் மீண்டும் வர்றார் எனும் வரிகளை நிஜமாக்கியுள்ளார். ஃபேப் 4 வீரர்களில் ஜோ ரூட் சமீபத்தில் தன் 28 சதத்தைப் பூர்த்தி செய்தார். தற்போது ஸ்டீவ் ஸ்மித்தும் 18 மாதங்கள் கழித்து சதம் அடித்துள்ளார். இன்னும் விராட் கோலியும் கேன் வில்லியம்சனும் தான் பாக்கி. கோஹ்லி தன் 28வது டெஸ்ட் சதத்தை நோக்கி 2 ஆண்டுகளாக பயணிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 24 டெஸ்ட் சதங்கள் விளாசி இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார். மேலும், 28 டெஸ்ட் சதங்கள் அடிக்க குறைந்த இன்னிங்ஸ் எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

டான் பிராட்மேன் 77 இன்னிங்ஸில்
சச்சின் டெண்டுல்கர் – 144 இன்னிங்ஸ்
ஸ்டீவ் ஸ்மித் – 153 இன்னிங்ஸ் *

ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த கம்பேக்கை அடுத்து தங்கள் நாயகன் விராட் கோழி எப்போது இது போல சதம் விளாசி மகிழ்விப்பார் என்ற ஏக்கத்தில் அவரது ரசிகர்கள் மூழ்கியுள்ளனர். 71வது சதத்திற்காக விராட் கோலியின் 2 ஆண்டு கால காத்திருப்பு வருகின்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரில் முடிவடையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -