இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் ஆக தற்போது விராட் கோலி இருந்து வருகிறார். அவருடைய இடத்திற்கு அடுத்து எந்த இந்திய இளம் வருவார் என்பது குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது இந்திய அணியில் விராட் கோலியின் இடத்தை பிடிக்கக்கூடிய வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் இவர்களில் ஒருவரை இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்கள் என்று கணித்திருக்கிறார்கள்.
சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால்
சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன் குவித்திருந்த சச்சின் சாதனையை முறியடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்தார். சச்சினின் பெரிய சாதனைகளை முறியடிப்பதற்கான வாய்ப்பில் ஒருவர் இருந்தாலே அவர் திறமையானவராக இருந்தால் மட்டுமே முடியும். இந்த வகையில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர் ஆக வெளியில் வந்தார்.
அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் எடுத்து ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையையும் படைத்தார். அதேபோல் 23 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி 723 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி இருக்கிறார். தற்போது இவர்களில் யார் அடுத்த விராட் கோலி என்பதுதான் போட்டியாக இருந்து வருகிறது.
ஆஸ்திரேலியா வீரர்கள் கருத்து
ஆஸ்திரேலியா நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் ஒரு தலைமுறையின் சூப்பர் ஸ்டார் வீரராக இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார். இதே போல மிட்சல் ஸ்டார்க் கூறும் பொழுது ” ஒருவேளை ஜெய்ஸ்வால் அடுத்த பெரிய சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
இவர்கள் இருவரது கருத்தையுமே நாதன் லயனும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஜோஸ் ஹாசில்வுட் கூறும் பொழுது ” ஜெய்ஸ்வால் எல்லா கிரிக்கெட் வடிவங்களுக்கும் ஏற்ற பரபரப்பான வீரராக தெரிகிறார்” என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் கேமரூன் கிரீன் மற்றும் டிராவீஸ் ஹெட் மட்டுமே சுப்மன் கில்லின் திறமை குறித்து பேசி இருக்கிறார்கள். பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டார் ஜெய்ஸ்வால் என்று தான் தெரிவித்திருக்கிறார்கள்.